Asianet News TamilAsianet News Tamil

அகர் மரம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ...

Heres some information you do not know about the Akar tree ...
Heres some information you do not know about the Akar tree ...
Author
First Published Apr 17, 2018, 1:07 PM IST


அகர் மரம்

உலகிலேயே மிக விலை உயர்ந்தது அகர் மரம். சந்தன மரத்தைவிட சுமார் 10 மடங்கு சந்தை மதிப்பு கொண்டது. 

இன்றைய சந்தை விலை நிலவரப்படி 1 கிலோ அகர் மரத்தின் விலை தரத்தைப் பொறுத்து 50 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபா வரையும், 1 கிலோ அகர் எண்ணெயின் விலை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாக்கும் அதன் தரத்தைப் பொறுத்து விற்கப்படுகிறது. 

இந்த மரத்திலிருந்து 500 வகையான வாசனைத் திரவியங்கள், அகர் பத்திகள், விலையுயர்ந்த சோப்புகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களும், மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

சந்தன மரங்களின் வேர்கள் ஒட்டுண்ணித் தன்மை கொண்டவை. இதனுடன், அகர் மரத்தை ஒப்பிட்டால் சந்தன மரம் 20 ஆண்டுகளில் கொடுக்கக் கூடிய வருமானத்தை, அகர் மரம் வளர்க்க ஆரம்பித்த 8 லிருந்து 10 ஆண்டுகளுக்குள் கொடுக்க ஆரம்பித்துவிடும்.

அகர் மரத்தின் பூர்வீகம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தொடங்குகிறது. ஆனால், இம்மரத்தைப் பற்றி மக்கள் அதிகளவில் அறிந்திருக்கவில்லை. அகர் மரங்களின் வரலாறு சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. இம்மரம் நம் நாட்டின் கலாச்சாரத்துடனும், இறை நம்பிக்கையுடனும் ஒன்று கலந்திருக்கின்றது.

அகர் மர வளர்ப்பிற்கு முக்கியமானது பொருத்தமான தட்பவெட்ப நிலைதான். பலதரப்பட்ட மண் வகைகளில் வளர்ந்தாலும் இயற்கை மண் வளம் மிக்க காட்டுப் பிரதேசங்களில்தான் நன்றாக வளரும். 

ஆண்டிற்கு 125 -750 சேன்டி மீட்டர் வரையிலான மழையளவுள்ளும், கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 1,500 மீட்டர்கள் உயரமுள்ளதுமான பிரதேசங்கள்தான் அகர் மர வளர்பிற்கு ஏற்றவை.

அகர் மரம் பயிரிட்டபின், அறுவடை வரையிலும் விவசாயிகளுக்கு எவ்விதச் செலவையும் கொடுப்பதில்லை. சிறப்பான கவனம் கொடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியமும், சிரமமும் ஏற்படுவதில்லை. இந்த மரங்களின் மெல்லிய இலைகள் உதிர்ந்து, அவைகளே மரங்களுக்கு இயற்கை உரமாகி விடுகின்றன. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios