கோழிக் கொட்டகையில் முட்டைகளின் தரத்தை பராமரிக்க இதோ வழி...
இனப்பெருக்க கோழிக் கொட்டகையில் முட்டைகளின் தரத்தைப் பராமரிக்கும் வழி
கோழிகள் தங்களுடைய முட்டைகளை கூட்டிலுள்ள பொருட்களின் மேல் இடும். சுத்தமான, உலர்வான, பூஞ்சான் தாக்குதலற்ற பொருட்களைக் கூட்டுக்குள் வைப்பதால் முட்டைகள் அழுக்காவதையும், உடைவதையும் தடுக்கலாம்.
அதே போல கோழிகளைத் தரையில் முட்டையிடுவதற்குப் பதிலாக கூட்டுக்குள் முட்டையிடுவதற்குப் பழக்குவதற்கு அதிகப்படியான கூடுகளைக் கோழிகள் முட்டையிடுவதற்கு ஆரம்பிப்பதற்கு முன்பே கொட்டகையில் வைக்கலாம்.
கோழிகள் இட்ட முட்டைகளை அடிக்கடி சேகரிப்பது அவற்றின் தரத்தை தக்க வைப்பதில் ஒரு முக்கியமான அம்சமாகும். கொட்டகையில் கோழிகள் இட்ட முட்டைகளை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு முறை சேகரிக்க வேண்டும்.
கருவுற்ற முட்டைகள் எளிதில் நுண்கிருமிகளால் அசுத்தமடைந்து விடும். எனவே இதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
எனவே, முட்டைகளைக் கொட்டகையிலிருந்து எடுப்பதற்கு முன்னால் முட்டைகளை எடுப்பவர் தங்களுடைய கைகளை கிருமி நாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்த பிறகே முட்டைகளை சேகரிக்க வேண்டும்.
முட்டைகளை அடுக்கப் பயன்படும் அட்டைகளும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, கரிமப் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.