முயல் தீவனமான முயல் மசாலை சாகுபடி செய்யும் முறை இதோ..
முயல் மசால்
தென்னிந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பயறுவகை தீவனப்பயிராகும்.
வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
வருட மழை அளவான 450 – 840 மிமீ போதுமானது.
அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது.
புரதத்தின் அளவு 15 முதல் 18 சதவீதமாகும்.
மானாவாரியில் கொழுக்கட்டைப் புல்லை முயல் மசாலுடன் 3:1 என்ற விகிதத்தில் கலப்பு பயிரிடலாம்.
பருவம் மற்றும் இரகங்கள்
பருவம்: வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவ மழை காலம் விதைப்புகு ஏற்றது.
இரகங்கள்:
ஸ்டைலோசான்தாஸ் ஹெமடா (ஒரு வருடப்பயிர்)
ஸ்டைலோசான்தாஸ் ஸ்கேப்ரா (பல்லாண்டுப் பயிர்)
நிலம் தயாரித்தல்
உழவு: இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும்.
தொழு உரம்
எக்டருக்கு 10 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்டை உழவின் போது மண்ணில் கலக்க வேண்டும்.
பாத்திகள் அமைத்தல்
10 அல்லது 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் அமைக்கவும்.
உரமிடுதல்
மண் பரிசோதனையின் படி உரமிடவும், மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 20 : 60 : 15 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து அடியுரமாக இட வேண்டும்.
விதைப்பு
விதைகளை ரைசோபியக் கலவையில் எக்டருக்கு 600 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும்.
விதை அளவு – கோடுகளில் விதைத்தல் (30 X 15 செ.மீ) எக்டருக்கு 6 கிலோ, தூவுதல் எக்டருக்கு 10 கிலோ
விதைகளை 1 செ.மீ ஆழத்திற்கு மேல் விதைக்க கூடாது.
முயல் மசால் விதைகளை கடினமான விதை உறையைக் கொண்டவை. ஆகவே விதைகளை அடர்கந்தக அமிலத்தில் மூன்று நிமிடம் ஊறவைத்து விதைகளை நன்கு கழுவிய பின் குளிர் நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
அல்லது விதைகளை வெந்நீரில் நான்கு நிமிடம் ஊறவைத்து பின் குளிர் நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
நீர் மேலாண்மை
இது மானாவாரிப் பயிராகும். முன் வளர்ச்சிப் பருவத்தில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
களை நிர்வாகம்
தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.
அறுவடை
விதைத்த 75 நாட்களில், பூக்கும் தருணத்தில் முதல் அறுவடை செய்ய வேண்டும். பிறகு வளர்ச்சியைப் பொருத்து அறுவடை செய்யலாம்.
பசுந்தீவன மகசூல்
முதல் வருடத்தில் பயிரின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், மகசூல் குறைவாக இருக்கும். பிறகு விதை உதிர்ந்து முளைப்பதால் பயிர் நன்கு வளர்ந்தவுடன் எக்டருக்கு 30 – 35 டன்கள் தீவன மகசூலை மூன்றாவது வருடத்திலிருந்து அறுவடை செய்யலாம்.