சம்பங்கியைத் தாக்கும் பூச்சிகளும், அவற்றை கட்டுப்படுத்தும் அசத்தல் வழிகளும் இதோ...
சம்பங்கியைத் தாக்கும் பூச்சிகளும், கட்டுப்படுத்தும் வழிகளும்...
1.. வெட்டுக்கிளி, அட்ரேக்டோமார்பா ரெனுலேட்டா
சேதத்தின் அறிகுறி:
இளம் இலைகளையும் மொட்டுகளையும் உண்ணும்
தாக்கப்பட்ட தாவரங்கள் அதன் நளினத்தை இழந்து காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
கார்பரில் 5 சதவிதம் போட்டால் தாக்கம் ஏற்படுத்துவதை தடுக்கலாம்
முட்டைக்குவியல்களை வெளியேத் தெரியும்படி சுரண்டி இயற்கை எதிரிகள் உண்ணுவதற்கு வழிவகுக்கலாம்
நாற்றங்காளில் வலை போட்டால் இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
குயினால்பாஸ் 0.05 சதவிதம் (அ) மாலத்தியான் 0.1 சதவிதம் (அ) கார்பரில் 0.2 சதவிதம் தெளித்தால் தாவரங்களை பாதுகாக்கலாம்
2.. சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே
சேதத்தின் அறிகுறி:
இலைகளின் அடிப்பகுதியில் சிலந்தியில் தோன்றும்
இலைகளை கொத்துகளாக்கும் சிலந்திகள் சாறு உறிஞ்சுவதால் மஞ்சள் கோடுகள் இலைகளில் தோன்றும்
தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகிவிடும்
பூச்சியின் விபரம்:
சிவப்பு (அ) பழுப்பு நிறத்தில் சிலந்திகள் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
டைக்கோபால் 2மி.லி / லிட்டர் தெளித்தால் கட்டுப்படுத்தலாம்
3.. எலிகள்
சேதத்தின் அறிகுறி:
எலிகள் சம்பங்கி வயலில் குழிகள் தோண்டி சேதத்தை ஏற்படுத்தும்
கட்டுப்படுத்தும் முறை:
வயலில் நச்சுப்பொறி வைத்தால் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம்
வெளிச் சந்தையில் ரோபான் என்ற பெயரில் கிடைக்கும்
4.. கூன்வண்டுகள், மில்லோசெரஸ் வகை
சேதத்தின் அறிகுறி:
புழுக்கள் வேர்களை உண்ணும், கிழங்குகளில் துளையிட்டு சேதப்படுத்தும்
வண்டுகள் இரவில் உண்பவை அவை இலைகளையும், தண்டுகளையும் உண்டு அழிக்கும்
வண்டுகள் இலைகளின் ஓரத்தில் உண்ணும்
கட்டுப்படுத்தும் முறை:
கார்பரில் 10 சதவிதம் மண்ணில் போட்டால் கட்டுப்படுத்தலாம்.