நிலையான கூடார மாடல் சாதனம் அமைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் இதோ...

Here are the important tips to follow when setting up a standard terrace model device....
Here are the important tips to follow when setting up a standard terrace model device....


நிலையான கூடார மாடல் சாதனம் அமைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்

** சரியான கொள்ளளவு தேர்வு செய்யப்பட்ட வேண்டும்.

** தோண்டிய மண், குழிக்கு அப்பால் 1/2 மீட்டர் தூரத்தில் கொட்டப்பட வேண்டும்.

** கான்கிரீட் கலவை சுத்தமான, இதற்கென தயார் செய்யப்பட்ட இடத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.

** முதல் தரமான சேம்பர் செங்கற்களையே பயன்படுத்த வேண்டும்.

** சுவற்றின் வெளிப்புறம் மண் அல்லது மணலால் நிரப்பப்பட வேண்டும்.

** சுவற்றின் மேற்பகுதியின் சுற்றுப்புறத்தில் விடப்படும் இடைவெளியில் மண் மற்றும் தூசு போன்றவைகளை விழாத வண்ணம் பார்த்து கொள்ளவேண்டும்.

** இந்த இடைவெளியில் 1 : 3 சிமெண்ட் கலவையால் நீர் அதிகம் சேர்க்கப்பட்ட நிலையில் ஊற்றப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.

** சாணம் உட்புகும் / வெளிவரும் தொட்டியின் வெளிப்புறச் சுவர்கள் பொய் தளத்தை பிரித்த பிறகே கட்டப்பட வேண்டும்.

** பொய்த்தளத்தை பிரிப்பதற்கு வசதியாக இரு தற்காலிக தூண்கள் சாணம் உட்புகும், வெளிவரும் தொட்டிகளுக்காக விடப்பட்ட துளைகளின் அருகாமையில் அமைக்கப்பட வேண்டும்.

** பொய்த்தளம் (மண்டபம்) கட்டும் பொழுது சரிவு ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

** மண்டபத்தின் வெளிப்பூச்சு உட்பூச்சு ஆரம்பித்த அந்த நாளிலேயே முடிக்கவேண்டும்.

** செங்கற்களை பொய்த்தளத்தின் மீது அடுக்கும் பொழுது வாயு வெளிவரும் குழாயை சிறிய கம்பிகளை வெல்டு செய்து மண்டப மையத்தில் பொருத்தி விட வேண்டும்.

** சாணம் உட்புகும் / வெளிவரும் தொட்டிகள் கான்கிரீட் அல்லது மரப் பலகைகள் கொண்டு மூடி வைக்கவேண்டும்.

** செங்கல் கூடாரத்தை மணல் அல்லது மண் கொண்டு மூடி விடவேண்டும்.

** கரிசல் மண் போன்ற பிரச்சனைக்குரிய இடங்களில் சாண எரிவாயு சாதனம் அமைக்கும் பொழுது 2 அடி உயரத்திற்கு ஒரு முறை ஆர்.சி.சி கான்கிரீட் பெல்ட் அமைத்து கட்டவேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios