சத்துகளும் அவற்றால் பயிர்களுக்கு கிடைக்கும் பயன்கள் இதோ…
ஒவ்வொரு தனிபட்ட சத்துக்களும் ஒரு சில முக்கிய சேவைகளில் ஈடுபட்டாலும், அனைத்து சத்துக்களின் ஒன்றினைந்த சேவை தான் பயிரின் ஒட்டு மொத்த உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை நிர்ணயிக்கிறது.
அனைத்து சத்துக்களும் தேவையான அளவு இருந்தாலும் ஒரு சத்தின் அளவு மண்ணில் குறைந்து இருந்தாலும் அது பயிரின் உற்பத்தியை பாதிக்க வாய்ப்புண்டு. எனவே தான் அனைத்து வகை சத்துக்களை பற்றியும், அவை பயிருக்கு ஆற்றும் சேவை பற்றியும், மண்ணிலிருந்து சத்துக்கள் எவ்வாறு பயிருக்கு கிடைக்கிறது என்பது பற்றியும் நாம் அறிவது மிகவும் அவசியம்.
முதன்மை சத்துக்கள் மற்றும் அதன் பயன்கள்
தழை சத்து - இழை தழை வளர்ச்சிக்கு
மணி சத்து - வேரின் வளர்ச்சிக்கு
சாம்பல் சத்து - விளை பொருட்களின் தரத்தை நிர்ணயிப்பது மற்றும் இலையில் உற்பத்தி செய்யபடும் சத்தை பயிர்ன் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வது
சிறிது முக்கியயமான சத்துகள்
கால்சியம் - பயிரின் செற்சுவர் மற்றும் செல்லை வலுவாக்குவது
மெக்னீசியம் - பச்சயத்தில் உள்ள முக்கியமான சத்து
சல்பர் - பயிர் மற்றும் விளை பொருளின் நிறம் மற்றும் வாசனையை நிர்ணயிப்பது(உதாரணம்- பூண்டு)
குறைவான அளவு தேவைபடுபவை
போரான் - பூவிலிருந்து காய் உருவாக்கத்திற்கு உதவுகிறது
துத்தநாகம், மாங்கனீசு, இரும்பு, காப்பர், மாலிப்டீனம் - பல்வேறு என்சைம் மற்றும் வினை வேக மாற்றியாக செயல் பட்டு உயிர் உரமாக இருக்கிறது.