பால் குடிக்கும் ஆட்டுக் குட்டிகளுக்கு ஏற்ற தீவனப் பராமரிப்பு முறைகள் இதோ…

Here are some of the best ways to feed feeding lamb ...
Here are some of the best ways to feed feeding lamb ...


குட்டிகள் தங்கள் ஊட்டச்சத்துத் தேவைக்குப் பெரிதும் தாய்ப்பாலையே சார்ந்திருக்கின்றன. குட்டிகளுக்கு ஒரு மாத வயதாகும்போது அடர் தீவனம் அளிக்கத் தொடங்க வேண்டும்.

குட்டிகளுக்குச் சீம்பால் அளித்தல்

** முதல் மூன்று அல்லது நான்கு தினங்களுக்குக் குட்டிகளுக்கு நல்ல சீம்பால் கிடைக்க அவற்றைத் தன் தாயிடம் பால் குடிக்கச் செய்ய வேண்டும்.

** குட்டிகளின் இழப்பைத் தவிர்ப்பதில் சீம்பால் அளித்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது. பசுவின் சீம்பால் கூட குட்டிகளுக்கு மிகவும் சிறந்தது.

** ஒரு கிலோ உயிர் எடைக்க 100மி.லி. என்ற அளவில் சீம்பால் அளிக்க வேண்டும். சீம்பாலை 1-1.5 சதவிகிதம் (கனஅளவு/எடை) ப்ரோபியோனிக் அமிலம் அல்லது  0.1 சதவிகிதம் ஃபார்மால்-டிஹைட் கொண்டு பதப்படுத்தலாம். 

** சீம்பாலின் அமிலக் காரக் குறியீட்டைக் குறைவாகவே வைப்பதால் ப்ரோபியோனிக் அமிலமே ஏற்றதாகக் கருதப்படுகிறது. இவ்வாறு பதப்படுத்தப்படும் சீம்பாலின் தரத்தைப் பாதுகாக்க குளிர் நிலையில் வைத்தல் வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios