மானாவாரியில் நிலக்கடை சாகுபடி செய்யும்போது இவற்றை கவனிக்க மறக்க வேண்டாம்...
** தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண்டும்.
** ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மூட்டம் போட்டு வைக்க வேண்டும்.
** 15 நாட்கள் கழித்து கிளறிவிட்டு மீண்டும் மூட்டம் போட வேண்டும். இதன் மூலம் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்துகள் பயிருக்கு கிட்டும் நிலைக்கு வரும்.
** ஒரு மாதம் முடிந்து மானாவாரி நிலக்கடலை விதைக்கும்போது இந்த உரக்கலவையுடன் 9 கிலோ யூரியா மற்றும் 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை கலந்து விதைப்பு சாலில் இட வேண்டும்.
** ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுவதால் நிலக்கடலை மகசூல் அதிகரிப்பதுடன் மண்ணின் வளமும், ஈரத்தன்மையும் பாதுகாக்கப்படும்.
** வறட்சியை தாங்கி வளரும் தன்மை பயிருக்கு கிடைக்கும்.
** நிலக்கடலை பயிரின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.
** விழுதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கூடுதல் மகசூல் பெறமுடியும்.
** வைகாசி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு மழை பெறப்பட்டவுடன் துவங்கும்.