நல்ல விளைச்சல் தரும் வெள்ளைச்சோளம் அமர்நாத்…
வளமான மண்ணே அதிக மகசூலுக்குக் காரணம் என்பதில் சந்தேகமேயில்லை. வெள்ளைச் சோளம் அதிக மகசூல் வர அதிக இயற்கை உரங்களையும் சேத்துக் கொள்ளவேண்டும்.
பாரம்பரியச் சிறுதானியப் பயிரான வெள்ளைச் சோள சாகுபடி முறை, மற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பயன்படும்.
தமிழகத்தின் தலை சிறந்த விவசாய மாவட்டம் தேனி ஆகும். இங்கு விவசாயமே பிரதான தொழில். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரமாக இருப்பதும், பெரியாறு ஆறு பாய்வதும் தேனி மாவட்டத்தைச் செழிப்பாக்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே “தேனி மாவட்டம்” தான் சோளத்தில் அதிக மகசூல் எடுத்து, மகசூல் போட்டியில் முதல் நிலையில் இருக்கிறது.
பசுஞ்சாணி, கோமியம் கலந்த வாசனை காற்றில் மிதந்து வரும். நாட்டுக்கோழிகள் தனது குஞ்சுகளுடன் வீட்டினுள் உலா வரும். அப்படியொரு ஊர்.
தை மாதம் நெல்லு அறுவடை முடிஞ்ச பிறகு மாசி மாசத்துல சோளம் போடுறது வழக்கம். மொத்தமா 3 பால் மாடுகள் போடுற சாணி இருந்தாலும், வெள்ளைச் சோளத்துக்கு ஏக்கருக்கு 7 லோடு சாணி எரு போடனும். (1லோடு என்பது 2 டன் எருவுக்குச் சமம்) நல்லா உழுது கடைசியில ரோட்டவேட்டர் போட்டு மண்ணை புழுதி பதத்திற்கு கொண்டு வரவேண்டும்.
“மேலும் நிலத்துல 7 அடி x 7 அடி அளவில பாத்தி அமைகக் வேண்டும். அதிக விளைச்சல் எடுக்க நல்ல தரமான வீரிய ஒட்டுரக விதைகள் என்பதால் அமர்நாத் 2000 என்ற வெள்ளைச் சோள விதையை வாங்கிப் பயன்படுத்தலாம்.
1 அடி x 1 அடி இடைவெளி விட்டு ஒரு குத்துக்கு 3 முதல் 4 விதைகளை விதைத்து உயிர்த் தண்ணி பாய்ச்ச வேண்டும். இந்த வெள்ளைச் சோளத்தின் வயது 90 – 95 நாள்கள்தான்.
நல்லா முளைச்சு வெளி வந்தப்புறம் ஆரோக்கியமா இருக்கும் இரண்டுச் சோளச் செடியை மட்டும் விட்டுட்டு மீதியை அறுவடை செய்யலாம்.