நெல் வயலில் நன்னீர் இறால் சமகால வளர்ப்பு முறையில் இப்படிதான் வளர்க்கணும்...

Freshwater prawns in rice field
Freshwater prawns in rice field


நெல் வயலில் நன்னீர் இறால் சமகால வளர்ப்பு முறை

** நடவு செய்த 5 நாட்களுக்குப் பிறகு நுண் மீன்குஞ்சாக இருப்பின் ஹெக்டருக்கு 5000 எண்ணிக்கையிலும் , விரலளவு மீன் குஞ்சாக இருப்பின் ஹெக்டருக்கு 2000 எண்ணிக்கையிலும் வயலினுள் விட வேண்டும். 

** சரியாக உணவளித்தால் குறிப்பாக போதிய அளவு மிதவைத் தாவரங்கள் இருப்பின் விரைவில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். வழக்கமாக நெற்பயிருக்கு அளிக்கும் அளவை விட சற்று அதிகமாக உரமளித்தால் மிதவை உயிரிகள் நன்கு வளரும். 

** பூச்சித் தொல்லையைக் கட்டுப்படுத்த ஃபுயூரான் 1 ஹெக்டருக்கு 1 கிலோ என்ற விதத்தில் அளிக்கலாம். இதை அடி உரத்துடன் கலந்து இட்டு, பின் நிலத்தைச் சமப்படுத்தி விட வேண்டும்.

** நுண் மீன் குஞ்சுகளை வயலில் விட்ட பின் 10 வாரங்களுக்குப் பின்பும் விரலளவு மீன் குஞ்சுகளாக இருப்பின் 6 வாரங்களுக்குப் பிறகும் நீரை வடித்து விட்டுப் பின் அறுவடை செய்யலாம். 

** நெற்பயிரை அறுவடை செய்வதற்கு 1 வாரத்திற்கு முன்பு மீன்களை சேகரித்துவிட வேண்டும். மிதவை உயிரிகளை உண்டு வாழ்வதால் மீன் உற்பத்தியும் அதிகளவில் இருக்கும். 

** இம்முறை வளர்ப்பில் ஒவ்வொரு மீனும் 60 கிராம் எடையுடன் ஹெக்டருக்கு 500 கிலோ வரை கிடைக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios