வாழை மரங்களை பல ஆண்டுகளாக அழித்து வரும் முக்கிய நோய்கள்…
வாழை மரங்கள் கலப்பின விருத்தி இல்லாமல் இனப்பெருக்கம் செய்கிறது. இதனால், பல்வேறு வகையான நோய் எதிர்ப்பு மரபணுக்கள் ஒரே ரக வாழையில் இருப்பதில்லை.
எனவே,ம் வாழை மரங்கள் பல நோய்களால் எளிதில் தாக்கப்படுகின்றன.
முக்கிய நோய்கள்:
கறுப்பு சிகடோகா, பனமா ஆகிய பூஞ்சை நோய்கள் வாழையைத் தாக்கும் முக்கியமான நோய்கள் ஆகும்.
1.. கறுப்பு சிகடோகா நோய் 1960-களில் ஃபிஜி தீவுகளில் இருந்து ஏற்றுமதியான வாழைப் பழத்தைச் சுற்றப் பயன்படுத்திய இலைகள் மூலம் ஆசியா எங்கும் பரவியது.
2.. ஃபியூசாரியம் எனும் பூஞ்சையால் உண்டாகும் பனமா வாடல் நோய் 1950-களில் குரோசு மைக்கேல் எனும் வாழை இனத்தையே அழித்து விட்டது.
3.. கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவதால் நச்சுரி நோய்களும் எளிதில் பரவுகின்றன.
4.. நுனிக்கொத்து நோய் வாழையை அழிக்கும் முக்கியமன நச்சுரி நோயாகும்.
தீர்வு:
இந்த நோய்கள் தொற்றிய மரங்களை அழித்து எரிப்பதும், நோயைப் பரப்பும் பூச்சிகளை அழிப்பதுமே இதற்கு தீர்வாகும்.