ஆடிப்பட்டத்துக்கு சிறந்த இரகம் எது?...

fine crops-of-aadi


தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாதங்கள் மழைப்பொழிவுள்ள மாதங்கள். தென்மேற்குப் பருவமழை காலத்தில் வரும் ஆடிப்பட்டத்தில் குறுகிய கால இரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்வது நல்லது.
>
> தற்போது ஆண்டு முழுவதுமே அனைத்து வகையான பயிர்களும் விதைக்கப்பட்டாலும் அந்தந்தப் பருவத்துக்கான தனித்தன்மை உண்டு.
>
> ஆடிப்பட்டத்தின்போது, சுமாரான மழையே கிடைப்பதால், குறுகியகால இரகங்கள் தேர்வு செய்வதே சிறந்தது.
>
> நெல்லில் 100-110 நாள்கள் வயதுடைய இரகங்களைத் தேர்வு செய்யலாம்.
>
> சோளம், நிலக்கடலை, துவரை, கேழ்வரகு, சாமை, தினை ஆகியன 90 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு வரும் பயிர்கள். அதனால் இவற்றைத் தேர்வு செய்யலாம்.
>
> வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கிடைக்கும். இந்தப் பருவத்தில் நீண்டகால இரகங்கள் (6 மாதங்கள்) தேர்வு செய்யலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios