தேங்காயை வைத்து நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாம். எப்படி?
நம் நாட்டில் அதிகமான நீர் வளங்கள் தென் இந்தியா பகுதிகளில் தான் உள்ளது என்று பழங்கால அறிவியல் ஆய்வறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மிக எளிமையாக நம்முடைய வீட்டில் உள்ள தேங்காயை வைத்தே பூமிக்கு அடியில் ஓடும் நிலத்தடி நீர்த்தடத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் முறைகளில் தேங்காய் வைத்து பார்க்கும் முறையும் ஒன்று.
உலர் தேங்காயை பயன்படுத்தி நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாம்.
ஒரு தேங்காவை எடுத்து உறித்து (குடுமி மட்டும் உள்ளவாறு) எடுத்து கொள்ள வேண்டும்.
மெதுவாக “ட” வடிவில் உங்கள் கையில் வைக்க வேண்டும்.
பின்னர், உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடக்க வேண்டும்.
அப்போது எங்கு பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காவை கொண்டு சென்றால் தேங்காயின் குருமி 90 டிகிரியில் வானத்தை நோக்கி இருக்கும்.
இப்படி 90 டிகிரியில் தேங்காயின் குருமி இருந்தால் அங்குதான் தண்ணீர் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.