பால் கொடுக்கும் ஆடுகளில் மேற்கொள்ள வேண்டிய தீவனப் பராமரிப்பு முறைகள்…
** பால் உற்பத்தியைப் பராமரிக்க, பால் கொடுக்கும் பெட்டைகளின் தீவனத்தில், குட்டிகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தத் தேவையான தீவன மூலப் பொருட்கள் கலக்கப்படவேண்டும்.
** பெட்டைகளுக்கு நல்ல மேய்ச்சல் இருந்தாலே, அவற்றின் தேவைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விடும். கூடுதல் ஊட்டச்சத்து தேவைப்படும் போது, அதிகரிக்க வேண்டிய தீவன அளவு கீழ் வருமாறு :
** ஒரு பெட்டை ஆட்டின் ஒரு நாள் சராசரி தேவைகளை 450 கிராம் நல்ல உலர்புல், 1.4 கிலோ பதனப் பசுந்தீவனம் அல்லது 250 கிராம் தானியங்கள் ஆகியவற்றினால் 50 சதவிகிதம் ஈடு செய்ய வேண்டும்.
** பயிர்விக்கப்பட்ட பசும்புல் தீவனப் பயிர் அளிப்பதாயிருந்தால், ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 10 கிலோ அல்லது 400 கிராம் அடர் தீவனம் அல்லது 800 கிராம் தரமான பயிறு வகை உலர் புல் என்ற அளவில் குட்டி ஈன்ற பின் 75 நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
** எட்டு மணி நேர மேய்ச்சலும் அளிக்க வேண்டும்.