விவசாயிகள் இந்த கரைசலை குறைந்த செலவில் தயார் செய்து அதிக மகசூல் பெறலாம்...

Farmers can prepare this solution at low cost and get high yields ...
farmers can-prepare-this-solution-at-low-cost-and-get-h


 

அரப்பு மோர் கரைசலின் பயன்கள்:

1.. அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.

2.. அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.

3.. குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.

4.. அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.

5.. அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.

அரப்பு மோர் கரைசல் தயாரிக்கும் முறை:

1.. நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை இரண்டு கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும்.

2.. பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

3.. இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும்.

4.. பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும்.

5.. பின்பு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம்.

6.. கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகள், பண்ணை மகளிர் குறைந்த செலவில் அரப்பு மோர் கரைசலை தாங்களே தயார் செய்து குறைந்த காலத்தில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios