தாவர வளர்ச்சி ஊக்கிகள் பற்றி விவசாயிகள் கட்டாயம் தெரிஞ்சுக்கணும். ஏன்?
தாவர வளர்ச்சி ஊக்கிகள்:
ஒரு தாவரத்தின் வளர்ச்சியானது ஜீனுடைய செயல்பாடு மற்றும்சாதகமற்ற சூழ்நிலைக் காரணிகளால் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
தாவரங்களாலேயே உருவாக்கப்படும் சில பொருட்கள், அந்த தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும் உயிர்வேதிச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன.
இந்த பொருட்கள் தாவர வளர்ச்சிப் பொருட்கள் எனப்படும்.
வேதிச்செயல்பாடுகள் மூலமாக தாவரவளர்ச்சியை ஒழுங்குப்படுத்துதலில், தாவர ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சி அடக்கிகள்.
வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள்
இது, ஹார்மோன் போன்ற செயற்கையான கரிம சேர்மங்களாகும்,
சிறு அளவுகளில், இது வளர்ச்சியை ஊக்குவித்தோ அல்லது நிறுத்தியோ தாவரத்தின் வளர்ச்சியை மாற்றி அமைக்கிறது.
உதாரணம்: இன்டோல் 3 அசிடிக் அமிலம் மற்றும் நாப்தலீன் அசிடிக் அமிலம்.
தாவரஹர்மோன்கள்
இவை தாவரத்தினாலேயே உருவாக்கப்படும் கரிம சேர்மங்களாகும்.
மிகவும் நுண்ணிய அளவில், இவை செயல்திறன் பெற்றவையாகும்
தாவரத்தின் ஏதாவது ஒரு பகுதியில் இவை உருவாக்கப்பட்டு, வேறொரு இடத்திற்கு கடத்தப்படுகின்றன.
அங்கே, குறிப்பிட்ட வாழ்வியல், உயிர்வேதி மற்றும் புற அமைப்பு மாற்றங்களை ஊக்குவிக்கின்றன.
தாவர ஹார்மோன்கள் பொதுவாக ஐந்து பிரிவுகளாக வகைபாடு செய்யப்படுகின்றன. அவை, ஆக்ஸிஜன், ஜிப்ரலின், சைட்டோகைனின், எத்திலீன் மற்றும் அப்சிசிக் அமிலம்.