Asianet News TamilAsianet News Tamil

எலுமிச்சையைத் தாக்கும் ஐந்து முக்கிய பூச்சிகளும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகளும்…

Elumiccaiyait for the main pests that attack and ways to control them
elumiccaiyait for-the-main-pests-that-attack-and-ways-t
Author
First Published Apr 18, 2017, 12:13 PM IST


அ.. சாறு உறிஞ்சும் பூச்சிகள்:

அறிகுறிகள்:

1.. இளம் இலைகள் மற்றும் பூக்களை உண்ணும்.

2.. டிரைஸ்டிகா நச்சுயிரி நோயை பரப்பும்.

3.. இளம் பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சும்.

4.. செடிகள் வாடும், பூக்கள் வாடி தொங்கும்.

5.. தாக்கப்பட்ட இலைகள் கிண்ண வடிவில், சுருக்கங்களுடன் காணப்படும்.

6.. செடிகளின் வளர்ச்சி தடைப்படும். 

கட்டுப்பாடு:

1.. மஞ்சள் ஒட்டுப் பொறியை பயன்படுத்துதல்

2.. மீத்தைல் டெமட்டான் (மெட்டாஸிஸ்டாக்ஸ்) (அ) டைமெத்தோயேட் (ரோகர்) 2 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்

3.. காக்ஸிநெல்லிட் வண்டுகள், ஸிரிபிட் ஈக்களை பயன்படுத்துதல்.

ஆ.. எலுமிச்சை கருப்பு ஈ, அலிரோகேன்தஸ் வோக்லுமி

அறிகுறி:

1.. இலைகளில் சாறு உறிஞ்சப்படுவதால் மஞ்சளாகிவிடும்

2.. இலைகளின் மேல் படிந்த பூச்சியின் கழிவின் மீது கருநிற பூசணம் வளரும்

3.. இலைகள் கொட்டும்

கட்டுப்பாடு:

1.. தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்.

2.. செடி நன்றாக வளரும் நிலையில் பூச்சிக்கொல்லிகளை தெளித்தல்.

3.. மாலத்தியான் 0.05% (அ) மோனோகுரோட்டோபாஸ் 0.036% (அ) கார்பைரில் 0.1% (அ) மீத்தைல் பாரத்தியான் 0.05% தெளித்தல்.

4.. இயற்கை எதிரிகளான ஸிர்பிட்ஸ், க்ரைசோபிட்ஸின் நடமாட்டத்தை ஊக்குவித்தல்.

ஈ. மாவுப்பூச்சி, ப்ளானோகாக்ஸ் சிட்ரி

அறிகுறி

1.. இலைகளில் சாறு உறிஞ்சப்படுவதால் மஞ்சளாகிவிடும்

2.. இலைகளின் மேல் படிந்த பூச்சியின் கழிவின் மீது கருநிற பூசணம் வளரும்

3.. இலைகள் கொட்டும்

கட்டுப்பாடு:

1.. மானோகுரோட்டோபாஸ் 25 மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.

2.. கிரிப்டோலீமஸ் மாண்ட்ரோசியரி எனும் இரைவிழுங்கி வண்டுகளை மரத்திற்கு 10
பூச்சிகள் வீதம் விடலாம் அல்லது ஏக்கருக்கு 1000 – 2000 வண்டுகள் விடலாம்.

உ.. பழச்சாறு உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சி, ஒக்ரிஸ்  புல்லொனிக்கா, ஓ.மெட்டர்னா 

அறிகுறி:

1.. இரவு நேரங்களில் அந்துப்பூச்சிகள் ஊசி போன்ற வாய்க் குழலால் பழங்களைக் குத்திச் சாற்றை உறிஞ்சுவதால் பழங்கள் அழுகி நாளடைவில் உதிர்ந்துவிடும்.

2.. அந்துப்பூச்சி பெரியதாக பழுப்பு நிற முன் இறக்கையில் திட்டுத்திட்டான கோடுகளுடனும் ஆரஞ்சு நிற பின் இறக்கையில் பெரிய கருப்புப் புள்ளியையும் (ஓ. மெட்டர்னா) கொண்டிருக்கும்.

3.. கருப்புப் புள்ளிகள் அரை வட்டமாக கொண்டிருக்கும் ஓஃபுல்லோனிக்கா பூச்சி:

4.. புழு 50 மி. மீ நீளமாக மஞ்சள், நீல, ஆரஞ்சு நிறப் புள்ளிகளுடன் டீனோஸ்போரா கார்டிஃபோலியா என்ற களைச் செடிகளில் காணப்படும். இது காவடிப்புழு வகையைச் சார்ந்தது.

கட்டுப்பாடு:

1.. புழுக்கள் வாழும் களைகளை அழித்தல்

2.. விளக்குப்பொறி வைத்து அந்துக்களைக் கவர்நதழித்தல்

3.. இரவில் புகை மண்டலம் ஏற்படுத்தி அந்துக்களை விரட்டுதல்

4.. பழங்களை பாலிதீன் பை கொண்டு மூடி வைத்தல். காற்றுப் புக சிறு துளைகள் இருக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios