தீனபந்து எரிவாயுக் கலன் அமைக்கும் முறை மற்றும் செயல்படும் விதம் ஒரு அலசல்...
தீனபந்து எரிவாயுக் கலன் அமைக்கும் முறை மற்றும் செயல்படும் விதம்:
** கலனின் அடிப்பாகம் கால்பந்து வடிவில் கான்கிரீட் கலவையில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்டிடச் செலவு குறைக்கப்படுகிறது. அதாவது கான்கிரீட் குழிவாகப் போடப்படுவதால் மேலே கட்டப்பட வேண்டிய கட்டிடத்தின் அளவு (கொள்ளளவு) குறைக்கப்படுகிறது.
** அதன்பின் கான்கிரீட் மேலே இருந்து அரைப்பந்து வடிவில் முடிந்து விடுவதால் செலவு குறைக்கப்படுகின்றது. அளவுகளில் தவறு எற்பட வாய்ப்பில்லை.
** சாணம் ஊற்றுவதற்காக 6 அங்குல குழாய் பொருத்தப்பட்டு அதன் மேல் சாணக்கரைசலைத் தயாரிப்பதற்கான சிறிய கரைக்கும் தொட்டியைக் கட்டிக் கொள்ளலாம்
** சாணம் வெளிவரும் தொட்டிபெரிய அளவில் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் எரிவாயு அதிகமாக உற்பத்தியாகும் பொழுது அதிக அளவில் பொங்கிக் கூடாரத் தொட்டியிலிருந்துசாணக் கரைசல் வெளிவரும் தொட்டியில் ஏறி நிற்கும்.
** இவ்வாறு சாணம் வெளிவரும் தொட்டியில் உள்ள சாணத்தின் மட்டம், எரிவாயுவை எரிக்க ஆரம்பித்தால் வெளிவரும் தொட்டியிலுள்ள சாணக் கரைசல் கீழே இறங்க ஆரம்பிக்கும். இங்ஙனம் சாணம் வெளிவரும் தொட்டியில் சாண மட்டம் ஏறி இறங்குவதிலிருந்து சாதனம் நன் முறையில் இயங்குவதையும், எவ்வளவு எரிவாயு உற்பத்தியாகின்றது அல்லது இருக்கிறது என்பதை உணரலாம்.
தீனபந்து வடிவக் கலனின் சிறப்பியல்புகள்
** கிராமத்தில் கிடைக்கக்கூடிய செங்கல், சிமெண்ட், மணல் மற்றும் ஜல்லிக் கற்களால் அடுப்பு கட்டப்படுகிறது.
** தரைக்கடியிலேயே கட்டி முடிக்கப்படுகிறது.
** நீடித்த உழைப்பு கொண்டது.
** பராமரிப்பு செலவே கிடையாது.
** பயிற்சி பெற்ற கிராமத்து கொத்தனார்களே எளிதில் கட்டக்கூடியது.
** குளிர் காலத்தில் வாயு உற்பத்தி அதிகமாகக் குறைவதில்லை.
** குறைந்த செலவில் கட்டப்படக்கூடியது.