கறிக்கோழிகளை வளர்க்க வேண்டுமா? இதோ அதற்கேற்ற கோழிப்பண்ணை அமைக்கும் முறை?

Do you want to grow poultry? Here is the method of setting up a poultry plant?
Do you want to grow poultry? Here is the method of setting up a poultry plant?


கறிக்கோழிகளை வளர்ப்பதற்கு ஏற்ற கோழிப்பண்ணை

கோழிப்பண்ணைகளை அமைக்கும் திசை

கோழிப்பண்ணைகளின் நீளவாக்குப் பகுதி கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைப்பதால் கோழிகளின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதைத் தடுக்கலாம்.

அளவு

ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது ஒவ்வொரு கறிக்கோழிக்கும் ஒரு சதுர அடி இட வசதியும், ஒரு முட்டைக் கோழிக்கும் 2 சதுர அடி இட அளவு தேவைப்படும். எனவே ஒரு கொட்டகையில் வளர்க்கப்படும் கோழிகளின் எண்ணிக்கைக்கேற்றவாறு கொட்டகையின் அளவு வேறுபடும்.

நீளம் 

கோழிப்பண்ணைக் கொட்டகையின் நீளம் எவ்வளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கோழிக்கொட்டகையின் நீளம் வேறுபடும்.

அகலம்

வெப்ப மண்டலப் பகுதிகளில் இரண்டு பக்கமும் திறந்தவாறு அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளின் அகலம் 22-25 அடிக்கு மேல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்கூறிய அகலத்துடன் கொட்டகைகளை அமைத்தால் தான் கோழிக் கொட்டகைகளின் மத்தியப் பகுதியில் போதுமான அளவு காற்றோட்டம் இருக்கும். 

மேற்கூறிய அளவை விட அதிக அகலமுடைய கொட்டகைகள் அமைத்தால் அவற்றில் வெப்பம் அதிகமுள்ள நேரத்தில் காற்றோட்டம் இருக்காது. கோழிக் கொட்டகைகளின் அகலம் 25 அடிக்கு மேல் இருந்தால் கூரையின் நடுப்பகுதியில் காற்றோட்டம் இருக்குமாறு அமைக்கவேண்டும். வெப்பமான, உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய வாயுக்கள் கூரையிலுள்ள ஜன்னல்கள் வழியாக வெளியேறிவிடும். சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கோழிப்பண்ணைகளின் அகலம் 40 அடி அதற்கு மேலும் அமைக்கப்படுகிறது. ஏனெனில் இக்கொட்டகைகளில் காற்றோட்டம் எக்ஸாஸ்டர் காற்றாடிகள் மூலம் அளிக்கப்படுகிறது.

உயரம்

கொட்டகையின் பக்கவாட்டுப் பகுதி, கொட்டகையின் அஸ்திவாரத்திலிருந்து கூரை வரை 6-7 அடியும், மத்தியப் பகுதியில் 10-12 அடியும் இருக்கவேண்டும். கூண்டு முறையில் அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளில், கூண்டுகளின் அமைப்புக்கேற்றவாறு கொட்டகையின் உயரம் அமைக்கப்படவேண்டும்.

அஸ்திவாரம்

கோழிப்பண்ணைகளின் உள்ளே தண்ணீர் புகாதவாறு பாதுகாப்பதற்கு நல்ல தரமான அஸ்திவாரம் மிகவும் அவசியமாகும். கொட்டகையின் அஸ்திவாரத்தை காங்கிரீட் உதவியால் 1-1.5 அடி உயரத்திற்கு நிலத்திற்கு அடியிலும், நில மட்டத்திற்கு மேல் 1-1.5 அடி உயரமும் இருக்குமாறு அமைக்கவேண்டும்.

கொட்டகையின் தரை 

கொட்டகையின் தரை காங்கிரீட்டால் அமைக்கப்பட்டு, எலிகள் புகாதவாறும், ஈரமற்றதாகவும் இருக்குமாறு அமைக்கப்படவேண்டும். கொட்டகையின் தரை அதன் சுவற்றிலிருந்து 1.5 அடி நீண்டிருக்குமாறும் அமைப்பதால் எலி மற்றும் பாம்புத் தொல்லையிலிருந்து கோழிகளைக் காப்பாற்றலாம்.

கதவுகள்

ஆழ்கூள முறையில் அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளில் கதவுகள் வெளியே திறக்குமாறு அமைக்கப்பட வேண்டும். கதவின் அளவு 6 x .5அடி அளவில் அமைக்கப்படவேண்டும். கோழிப்பண்ணைக் கொட்டகையின் கதவுக்கு வெளியில் ஒரு சிறிய பள்ளம் அமைத்து கிருமி நாசினிக் கரைசல் ஊற்றி வைக்கவேண்டும்.

கொட்டகையின் பக்கவாட்டுச் சுவர்கள் 

கொட்டகையின் பக்கவாட்டுச்சுவர் 1-1.5 அடி உயரமும், அதாவது கோழிகளின் முதுகுப்பகுதிக்கு இணையாக இருக்குமாறு அமைக்கப்படவேண்டும். இந்த பக்கவாட்டுச் சுவர் கோழிகளை வெயில், குளிர், மழையின்போதும் பாதுகாக்கிறது. 

இது மட்டுமன்றி பக்கவாட்டுச் சுவர் கோழிக்கொட்டகையில் போதுமான அளவு காற்றோட்டம் இருக்கவும் வழிவகை செய்கிறது. ஆனால் கூண்டு முறை அமைக்கப்படும் கொட்டகைகளில் பக்கவாட்டுச்சுவர் தேவையில்லை.

கூரை

கோழிப்பண்ணைக் கொட்டகையின் கூரை ஓடு, தாவர நார்கள், ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள், காங்கிரீட் போன்றவற்றால் செலவிற்கேற்றவாறு அமைக்கலாம். பல்வேறு விதமான கூரைகளான கேபிள், பாதி மானிட்டர், முழு மானிட்டர், தட்டையான காங்கிரீட், கேம்ப்ரல், கோத்திக் போன்றவற்றை அமைக்கலாம். கேபிள் வடிவக் கூரை வெப்பமண்டலப் பகுதிகளான இந்தியா போன்ற நாட்களுக்கு ஏற்றது.

கூரையின் நீட்டியுள்ள பகுதி 

பண்ணைக் கொட்டகையின் சுவரை ஒட்டி நீட்டியிருக்கும் கூரைப் பகுதி 3.5 அடிக்கு குறையாமல் இருக்குமாறு அமைக்கவேண்டும். இவ்வாறு அமைப்பதால் மழை நீர் கொட்டகைக்குள் செல்வதையும் தடுக்கலாம்.

வெளிச்சம்

கோழிப்பண்ணைகளில் தரையிலிருந்து 7-8 அடி உயரத்தில் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இன்கேன்டசன்ட் விளக்குகளை உபயோகிக்கும்போது இரண்டு விளக்குகளுக்கும் இடையிலுள்ள இடைவெளி 10 அடியாக இருக்கவேண்டும். 

ஃபுளூரெசன்ட் விளக்குகளை அமைக்கும்போது அவற்றுக்கு இடையிலுள்ள இடைவெளி 15 அடியாக இருக்கவேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios