ஒரு ஏக்கருக்கு 8000 கிலோ மகசூல் வேண்டுமா?

do you-want-a-yield-of-8000-kg-per-acre


ஒரு ஏக்கருக்கு 8000 கிலோ மகசூல் வேண்டுமா? அப்போ திருந்திய நெல் சாகுபடியை முயற்சி செய்து பாருங்கள்.

சி.ஆர்.1009 ரகத்தின் ஆதார விதையை பட்டுக்கோட்டையில் இருந்து பெற்று, ஒரு ஏக்கருக்குத் தேவையான 3 கிலோ நெல் விதையை சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்து இந்தப் புதிய தொழில்நுட்ப முறையின் மூலம் விவசாயம் செய்தால், ஒரு ஏக்கருக்கு 8 ஆயிரத்து 272 கிலோ தானிய மகசூல் மற்றும் ஹெக்டேருக்கு 20 ஆயிரத்து 680 கிலோ தானிய மகசூல் எடுக்கலாம்.

இவ்வாறு பயிரிடக் கூடிய அரிசி, உருவத்தில் பெரிய வகை அரிசியாகும். இந்த வகை அரிசியை சாதமாகச் சமைத்து சாப்பிடுவதைக் காட்டிலும், இட்லி, தோசை போன்ற மாவுகளுக்குப் பயன்படுத்தினால் ருசியாக இருக்கும்.

மேலும் அரிசி மாவுக்கும் இந்த வகை அரிசியை உபயோகிக்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios