காளான் சாகுபடியில் மகசூல் எப்போது குறைவாக இருக்கும் தெரியுமா?
காளான் வித்து பரவும் முறை:
உருளைப் படுக்கைகளை வயரில் கட்டி தொங்கவிட வேண்டும். படுக்கையில் பூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள்ஆகும். பின் படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு மாற்ற வேண்டும்.
காளான் அறை தயாரித்தல்:
காளான் பூசணம் முழுமையாக பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும்.
காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும். அவற்றை அறுவடை செய்த பின் பாலிதீன் பையை நீக்கிவிட வேண்டும்.
அறையின் வெப்பநிலை, ஈரப்பதத்தை தேவையான அளவு பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்கவும்.
காளான் அறுவடை:
காளான்களை அறுவடை செய்தபின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
ஒரு வார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும்.
இதுபோல் 3 முறை அறுவடை செய்யலாம்.
ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900 கிராம் மகசூல் கிடைக்கும்.
மேற்கூறிய முறையில் காளான் வளர்ப்பு செய்து அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.
காளான் உற்பத்தி செய்வது என்பது ஒரு கடினமான வேலையில்லை. வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம். ஆனால் கோடை காலத்தில் 30 -40% மகசூல் குறைவாக கிடைக்கும்.