கொம்புக்குருத்து நீக்கும் என்றால் என்ன தெரியுமா? வாசிங்க முழு தகவலும் உள்ளே...
கொம்புக் குருத்து நீக்குதல்
கால்நடைகளில் கொம்புகள் தேவையில்லாத ஒன்று இதன் மூலம் கால்நடைகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு காயப்படுத்திக் கொள்கின்றன. மேலும் கையாள்பவருக்கும் இது கடினம் ஆகும். கால்நடை உட்கொள்ளும் உணவின் ஒரு பகுதி இந்த கொம்பு வளர்ச்சியில் செலவிடப்படுகிறது. எனவே இந்த அவசியமற்ற அமைப்பை நீக்கிவிடுதல் நன்று.
கொம்புக் குருத்து நீக்கம்
கொம்புக் குருத்து நீக்கம் என்பது கொம்பு உருவாக்கும் செல்களை அழிப்பதாகும். முன்தலை சைனஸ் பகுதியைப் பாதிக்காமல் இதைச் செய்ய வேண்டும். இரசாணனங்கள் அல்லது சூடான இரும்பை பயன்படுத்திக் கொம்புக் குருத்தை நீக்கலாம்.
பல முறைகள் குருத்தை நீக்குவதற்கு இருந்தாலும் யாவற்றிலும் நன்மை தீமைகள் உண்டு. சூடான இரும்பு கொண்டு தேய்ப்பதே சாதாரணமாகக் கையாளப்படும் முறையாக இருந்தாலும் அது மிகவும் வலி ஏற்படுத்தக் கூடியது. மின்சார பியூட்டேன் கொண்டும் நீக்க இயலும்.
மிக அதிகமான வெப்பம் பயன்படுத்தும்போது குருத்துக்குக் கீழ் உள்ள எலும்புகள் பாதிப்படையும் காஸ்டிக் (caustic) முறையில் குருத்து நீக்குதல் சிறந்தது. காஸ்டிக் பொருட்களான சோடியும் ஹைட்ராக்ஸைடு, கால்சியம் ஹைட்ராக்ஸைடு குருத்தைச் சுற்றிலும் உள்ள பகுதியோ கண்களோ பாதிக்கப்படலாம்.
எந்த அளவு இரசாயனம் திசுக்களுடன் தொடர்புகொள்கிறதோ அந்தளவு பாதிப்பு அதிகம் கால்சியம் குளோரைடு ஊசிமூலம் செலுத்தியும் குருத்தை நீக்கலாம். ஆனால் முறையான மயக்க மருந்தளித்தல் போன்ற முன்னேற்பாடின்றி இதை பயன்படுத்த முடியாது. மேலும் கத்தி குருத்து நீக்கும் (கரண்டி, ஸ்பூன்)(spoon) போன்றவை மூலமாகவும் நீக்கலாம்.
கொம்பு நீக்கம்
கொம்பு முளைத்த பின்பு நீக்குவதே கொம்பு நீக்கம் ஆகும். வளர்ந்த கொம்பை நீக்க கத்தி இரம்பம், கரன்டி மின்சார ஒயர், குழாய் போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். பார்னஸ் முறையில் குழிந்த கொம்பு நீக்கியைப் பயன்படுத்தலாம்.
முதிர்ந்த கால்நடைகளுக்குக் கொம்பு நீக்கம் செய்வதால் அதன் முன்தலைப் பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிப்பைக் குறைக்க அயோடின் அல்லது டிஞ்சர் தடவலாம்.