நாட்டு மாட்டைப் போற்றி புகழ காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக நமது நாட்டில் நாம் அருந்தும் பாலில் 60 சதவீதம் வரை ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்ஸி போன்ற பல இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் ஆகும்.
இந்த இறக்குமதி இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலில் புரதத் துணுக்கு (A1 beta-casein) உள்ளது. இது இயற்கையான பாரம்பரிய மரபணுவைக் கொண்டது அல்ல. இது பிறழ்ந்த மரபணுவைக் கொண்டதாகும்.
இந்தப் பாலை அருந்தும்போது நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்திலும் நாளமில்லா சுரப்பிகளிலும் நோய் தடுப்பு மண்டலத்திலும் பல உபாதைகள் ஏற்படுகின்றன.
தமனியில் படலம் படிதல், தமனி அடைப்பு, இதய நோய், மனச்சிதைவு, மதி இறுக்கம், முதல் நிலை வகை நீரிழிவு போன்ற நோய்களையும், குழந்தை இறப்பையும் அத்துடன் மனித உடல் இயற்கையாகவே பெற்றுள்ள நோய் எதிர்ப்பு திறனில் குறைபாட்டையும் ஏற்படுத்துகின்றன.
பசுவின் பாலுக்கு அமிர்தம் என்ற பெயருண்டு. அமிர்தத்திற்கு நஞ்சு போக்கும் பொருள் எனவும் பொருளுண்டு. ஆனால் நாம் அமிர்தம் என்ற பெயரில் நஞ்சை அருந்துகின்றோம்.
பிரச்சனைக்குரிய இந்த ஏ1 பிறழ்வு புரதம் இந்திய மண்ணுக்கே உரிய நாட்டு மாடுகளில் இருப்பதில்லை. மாறாக எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஏ2 இணை மரபணு புரதம் மட்டுமே காணப்படுகின்றது.
எனவேதான் உள் நாட்டு பசுவை மட்டும் வளர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட 80 கறவை மாடுகள் உள்பட மொத்தம் 196 உயர் ரக மாடுகள் தற்போது எங்களிடம் உள்ளன.
அவைகளுக்கு ஹார்மோன்கள் உட்பட எந்தவிதமான ஊக்க மருந்து ஊசிகளும் போடப்படுவதில்லை. மாடுகளுக்கு நெல்லின் உமி, தவிடு, வைக்கோல், கோதுமையின் உமி, தவிடு, கோ 4, வேலி மசாலா, சோளத்தட்டை, சோள மாவு, அகத்திக்கீரை, கடலைப் பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை பிண்ணாக்கு போன்ற இயற்கையான நல்ல தீவனங்களை கொடுப்பதன் வழியாக மட்டுமே பாலின் தரத்தை மேம்படுத்தலாம்.
பண்ணையில் கிடைக்கும் பாலுக்கு பெரும் சந்தை வாய்ப்பு உள்ளது. பாலை அப்படியே விற்பனை செய்யாமல், நெய் போன்ற பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும்போது விவசாயிகள் இன்னும் அதிக லாபம் பெறலாம்.