இந்த பசுந்தாள் உரத்தை சாகுபடி செய்தால் இப்படி ஒரு நல்லது நடக்கும் தெரியுமா?
தக்கைப்பூண்டு
தக்கைப்பூண்டு ஒரு பசுந்தாள் உரம். தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. அதிகமான செலவும் இருக்காது.
ஏனெனில் இதன் வேர்களில் முடுச்சிகள் இருப்பதால் அவற்றில் ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்கள் வாழ்வதற்க்கு ஏற்றதாக இருக்கிறது. இதன் வேர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் சேர்க்கிறது.
45 நாள்கள் முதல் 70 நாள்களுக்குள் பூப்பூத்தவுடன் அதனை அப்படியே அந்த நிலத்திலேயே மடக்கி உழுதுவிட வேண்டும்.
இப்பயிரானது 6 அடி வரை நன்றாக வளர்ந்து பூப்பூத்தவுடன் அதை அந்த இடத்திலேயே மடக்கி உழுது அதையே உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதால் அடுத்து போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. செலவும் அதிகம் இருக்காது. மண்ணின் வளம் கெடாமல் பாதுகாக்கப்படும். இந்த தக்கைப்பூண்டு செடிகள் உரமாக மாறி மண்ணின் தன்மையை அதிகரிக்கும்.
முக்கியமாக அடுத்து போடப்படும் பயிருக்கு தழைச்சத்து கிடைத்து விடுவதுடன் பூச்சி தாக்குதலே இருக்காது என்பதும் குறிப்பிடத் தக்கது.
மேலும் இப்பயிர் களிமண் நிலத்தில் பயிரிட ஏற்றது வேகமாக வளரக்கூடியது களர் நிலங்களைச் சீரமைக்க வல்லது. தண்ணிர் தேக்கத்தையும், வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது.