பரங்கி சாகுபடியில் விதையை எப்படி பிரித்தெடுக்கனும் தெரியனுமா? இதை வாசிங்க…

Do you know how to separate the seed in pankuni cultivation? Read this ...
Do you know how to separate the seed in pankuni cultivation? Read this ...


பரங்கி சாகுபடியில் விதை பிரித்தெடுக்கும் முறைகள்

1.. தேர்ந்தெடுக்கப்பட்ட இரகத் தன்மை கொண்ட நன்கு முதிர்ந்த காய்களையே விதை எடுக்க பயன்படுத்த வேண்டும்.

2.. மேலும் 1.5 கிலோ எடைக்கும் குறைவாக உள்ள காய்களை விதை எடுக்கப் பயன்படுத்தக் கூடாது. அக்காய்களை காய்கறிக்காக விற்று விடலாம்.

3.. பரங்கிக் காய்களில் விதை பிரித்தெடுப்பது மிக எளிது. விதை எடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட காய்களை முதலில் இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

4.. பின் காய்களின் உள்ளே நடுவில் உள்ள லேசான சதைப்பகுதியுடன் உள்ள விதைகளை சுரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

5.. அதன் பின் தண்ணீரில் கலந்து கசக்கி விதைகளை பிரித்து எடுத்து விட வேண்டும்.

விதை உலர்த்துதல்:

1.. பிரித்தெடுத்த விதைகளை உடனே முறைப்படி உலர வைக்க வேண்டும்.

2.. நன்கு கழுவிய விதைகளை சேகரித்து கித்தான் சாக்குகளின் மேல் லேசாக பரப்பி நிழலில் ஓரிரு நாட்கள் வேண்டும்.

3.. பின் சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். விதைகளை வெயிலில் உலர்த்தும் போது தினமும் காலை 8 முதல் 12 மணி வரையிலும், பின்னர் 3 முதல் 5மணி வரையிலும் உலர்த்துவது நல்லது.

4.. 12 முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அந்த இடைக்கால நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும் வெயிலின் வெப்பநிலை உச்சத்தில் உள்ளதாலும் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios