ஒரு கிலோ இறால் உற்பத்தி செய்ய எவ்வளவு தீவனம் தேவை தெரியுமா?
இறால் உற்பத்தி
குஞ்சுகள் விட்ட 2-ம் நாள் 2.2 கிலோ; 3-ம் நாள் 2.4 கிலோ என தினமும் 200 கிராம் தீவனத்தை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும்.
8-ம் நாளிலிருந்து 15-ம் நாள் வரை தினமும் 300 கிராம் தீவனத்தை அதிகரிக்க வேண்டும். 16-ம் நாளிலிருந்து 22-ம் நாள் வரை தினமும் 400 கிராம் தீவனத்தையும்;
23-ம் நாளிலிருந்து 30-ம் நாள் வரை தினமும் 500 கிராம் தீவனத்தையும் அதிகரிக்க வேண்டும். இறால் வளர்ச்சியை வைத்தே தீவனம் கொடுக்க வேண்டும்.
31-ம் நாள், குளத்தில் உள்ள இறாலைப் பிடித்து எடைபோட வேண்டும். பொதுவாக, அந்த வயதில் ஒரு இறால் குஞ்சு சராசரியாக 3 கிராம் எடையில் இருக்கும். ஒரு லட்சம் குஞ்சுகளில் 80 ஆயிரம் குஞ்சுகள் அளவுக்கு உயிரோடு இருக்கும்.
இவற்றின் மொத்த எடை 240 கிலோ இருக்கும். இதில் 7 சதவிகித அளவுக்குத் தீவனம் போட வேண்டும். இந்த வகையில், தினமும் 16.8 கிலோ தீவனம் போட வேண்டும்.
38-ம் நாள் ஒரு இறாலின் சராசரி எடை 4 கிராம் இருக்கும். மொத்த இறாலின் எடை 320 கிலோ. தினமும் இதில் 6 சதவிகிதம் அளவுக்கு தீவனம் போட வேண்டும். அடுத்தடுத்த வாரங்களில்... 5%, 4%, 3%, 2% என தீவனத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும்.
எடையில் 2 சதவிகிதம் தீவனத்தை கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். எடை பார்க்க அனைத்து இறால்களையும் பிடிக்க வேண்டியதில்லை. குட்டையில் நான்கு பக்கமும் தலா ஒரு முறை வலையை வீசி, அதில் கிடைக்கும் இறால்களின் எடையைக் கொண்டு, ஒட்டுமொத்த இறால்களின் சராசரி எடையை எளிதாகக் கணித்து விடலாம்.
ஒரு கிலோ இறால் உற்பத்தி செய்ய சுமார் ஒன்றே கால் கிலோ தீவனம் தேவைப்படும்.