சாதி மல்லி சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்க இதை செய்யுங்கள்…
மல்லிகைக்கு இணையாக சந்தையில் வரவேற்பு உடையது சாதி மல்லி. சில நேரங்களில் மல்லிகையை விட அதிக விலை கிடைக்கும்.
பொதுவாகவே பதியன் குச்சிகளை ஆடி பட்டத்தில் நாட்டால் விரைவில் துளிர்த்துவிடும். அரை அடி அகலம் ஒரு அடி ஆழம் உடைய குழிகள் எடுத்து அதில் அரை கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஒரு கிலோ மண்புழு உரம் சிறிது சுண்ணாம்பு தூள் கலந்து அதனுடன் மண் கலந்து இட்டு நடவு செய்து பின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
செடிகளுக்கு இடையே இடைவெளி 5×4 அல்லது 6×4 அடி இருக்க வேண்டும். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்சவேண்டும். வருடம் ஒரு முறை தரையில் இருந்து இரண்டு அடி விட்டு மீதி செடியை துன்டாக அறுத்து விட வேண்டும். செடிகள் நன்கு வளர்ந்த உடன் மண் அனைக்க வேண்டும்.
சாதி மல்லிக்கு களை எடுப்பது அவசியம். சிறு செடிகளாக இருக்கும் சமயத்தில் களைகளை மாட்டு ஏர் மூலமாக உழுது விடலாம். வரிசைகளின் இடையே சணப்பை விதைகள் தூவி நன்கு வளர்ந்த உடன் அவற்றை பிடுங்கி மூடாக்கு போடுவதன் மூலம் களைகள் கட்டுப்படும். மண் ஈரப்பதம் காக்கலாம். நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருகும்.
தொடர்ந்து கற்பூரகரைசல் வாரம் ஒரு முறை தெளிப்பதால் எந்தவிதமான பூச்சி தாக்குதலில் இருந்து முற்றிலும் காக்கலாம்.
மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலை வேரில் நீர் பாய்ச்சும் போது கலந்து விட வேண்டும். பதினைந்து நாள் ஒருமுறை செடிகளுக்கு இரண்டு கிலோ மண்புழு உரம் வேரில் இடவேண்டும். இதனால் மகசூல் அதிகமாக கிடைக்கும்.