கோயம்புத்தூர் ஆடு வகைக்கும், திருச்சி ஆடு வகைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்…
1.. கோயம்புத்தூர் ஆடு வகை
இவ்வினம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காணப்படுகிறது
முரட்டு ரோம உற்பத்திக்குப் பயன்படுகிறது
நடுத்தர உடலமைப்பைக் கொண்டது
பொதுவாக வெண்மை நிறம் கொண்டது. தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கருப்பு அல்லது பழுப்பு நிறம் காணப்படும்
30 சதவிகித பெட்டை ஆடுகளில் கொம்புகள் கிடையாது
வளர்ந்த கிடா 25 கி.கி எடையுடனும் பெட்டை 20 கி.கி எடையுடனும் இருக்கும்
2.. திருச்சி கருப்பு ஆடு
இவ்வினம் தமிழ்நாட்டின் திருச்சி, பெரம்பலூர், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் காணப்படுகிறது
முரட்டு ரோம உற்பத்திக்குப் பயன்படுகிறது
சிறிய உடலமைப்பைக் கொண்டது
உடல் முழுவதும் கருமை நிறம் கொண்டது
கிடாவுக்குக் கொம்பு உண்டு. பெட்டைக்குக் கொம்பு இல்லை
காதுகள் சிறியதாகவும், முன்னோக்கியும், கீழ்நோக்கியும் இருக்கும்
வளர்ந்த கிடா 26 கி.கி எடையுடனும் பெட்டை 19 கி.கி எடையுடனும் இருக்கும்