1.. பச்சை மிளகாய் மற்றும் பூண்டு கரைசல்

காம்பு நீக்கம் செய்யப்பட்ட 3 கிலோ பச்சை மிளகாயை அரைத்து, 3 லிட்டர் தண்ணீரில் இட்டு 24 மணி நேரம் வைக்க வேண்டும். கால் கிலோ வெள்ளைப்பூண்டை இடித்து, 100 மில்லி மண்ணெண்ணெயில் இட்டு, 24 மணி நேரம் வைக்க வேண்டும்.

பிறகு, இரண்டு கரைசலையும் ஒன்றாகக் கலந்து, 10 லிட்டர் அளவுக்கு வரும் வரை தண்ணீர் சேர்த்து, 100 கிராம் காதி சோப்பைக் கரைத்துவிட வேண்டும். இதை, பத்து லிட்டர் டேங்குக்கு 500 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.

2.. வேப்பங்கொட்டை மற்றும் பூண்டு கரைசல்

வேப்பங்கொட்டை- 5 கிலோ, காரமான வெள்ளைப்பூண்டு- அரை கிலோ இரண்டையும் ஆட்டு உரலில் இட்டு, இடித்து (எக்காரணம் கொண்டும் கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கக் கூடாது. காட்டன் துணியில் இறுக்கமாகக் கட்ட வேண்டும். 

பின்னர், 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்தால், கரைசல் தயார். இதனுடன் 100 கிராம் காதி சோப்பைக் கரைத்து, பத்து லிட்டர் டேங்குக்கு 500 மில்லி என்கிற விகிதத்தில் கலந்து, மாலை மூன்று மணிக்குப் பிறகு தெளிக்க வேண்டும்.

இந்த இரண்டில் எதை பயிர்களுக்கு பயன்படுத்தினாலும் பயிரின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.