மாம்பழம் சாகுபடியில் கவாத்தின்போது முக்கியாமா இவற்றை கடைபிடிக்கனும்..
1.. சிறிய அளவிலான குச்சிகள் மற்றும் நுனித்தண்டை வெட்டுவதற்கு வெட்டு கத்தரியையும், ஒன்று முதல் இரண்டு அங்குலம் வரை அகலமுள்ள கிளைகளை வெட்டுவதற்கு கவாத்து ரம்பத்தையும், இரண்டு முதல் இரண்டரை அங்குலம் அகலமுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு கிளை வெட்டும் கத்தியையும் பயன்படுத்தலாம்.
2.. பெரிய மரக்கிளைகளை ரம்பம் மூலம் வெட்டும் போது அந்த கிளையின் அடிப்பகுதியில் இருந்து 20 முதல் 40 மி.மீ வரை மேல்நோக்கி வெட்ட வேண்டும்.
3.. பிறகு மேலிருந்து வெட்ட வேண்டும். இவ்வாறு செய்யும் போது எளிதாகவும், பிசிறுகள் இல்லாமலும் கிளைகளை வெட்ட முடியும்.
4.. சாய்வான கோணத்தில் கிளைகளை வெட்டும்போது வெட்டிய பகுதியில் நீர்த்துளிகள் தேங்காமலும், அழுகல் ஏற்படாமலும் இருக்கும். பெரிய கிளைகள் உள்ள மரத்தை வெட்டும் போது சிறு, சிறு பகுதிகளாக வெட்ட வேண்டும்.
5.. சிறிய துண்டுகளாக கீழே விழும் போது மற்ற கிளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. கவாத்து செய்தபின் வெட்டப்பட்ட பாகத்தில் பூசணக் கொல்லி மருந்தை (போர்டோ கலவை) பசை போலத் தடவ வேண்டும். இல்லையென்றால் வெட்டுக்காயத்தின் வழியே பூசணங்கள் நுழைந்து நோய் உண்டாகும்.