வாழையில் ஊடுபயிராக வெள்ளரி பழம் பயிரிட்டால் கைநிறைய லாபம் கிடைக்கும்…
தோட்டக்கலை பயிர்களான காய்கறிகளை விவசாயிகள் பயிரிட முக்கிய காரணம் விவசாய கூலியாட்கள் பற்றாக்குறைதான்.
கத்தரிக்காய், வெண்டை, தக்காளி, பாகற்காய், காலிஃபிளவர், புடலை, சின்ன வெங்காயம், பூசணி வகைகள், முள்ளங்கி, கீரை வகைகள் மற்றும் பூ வகைகள் வகைகளை அறுவடை செய்ய கூலியாட்கள் தேவை இல்லை.
குடும்ப உறுப்பினர்களை வைத்தே கூட அறுவடை செய்துவிடலாம்.
இந்தத் தோட்டக்கலை பயிர்கள் மூலம்தான் அதிகளவில் நமக்கு லாபமும் கிடைக்கிறது.
வாழை, மஞ்சளில் ஊடு பயிராக வெள்ளரி
1.. பிப்ரவரி மாத இறுதியில் வாழை, மஞ்சளில் ஊடு பயிராக வெள்ளரி செடி பயிரிடப்பட்டது.
2.. 90 நாட்கள் பயிரான செண்டு வெள்ளரி, நன்கு விளைச்சலாகி மும்முரமாக அறுவடை நடக்கிறது.
3.. வெள்ளரி பழம் ஒன்று, 10 முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைவர்.
4.. விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால், தோட்டக்கலை பயிர்களான காய்கறி மற்றும் பூ வகைக்கு மாறியுள்ளனர் விவசாயிகள்.
5.. வெள்ளரி சாகுபடிக்கு ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. தினசரி, 200 முதல், 500 பழம் விளைச்சலாகும்.
6.. ஏக்கருக்கு ஒரு கிலோ விதை பயன்படுத்தலாம். அக்னி வெயில் அதிகமாக உள்ளதால் ஜூஸ் தயாரிக்க அதிகளவில் வெள்ளரி பயன்படுகிறது.
7.. வாழையில் ஊடுபயிராக பயிரிட்டுள்ளதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பது உறுதி.