சம்பா பருவத்தில் பயிர் சாகுபடி…

crop in-the-samba-season


 

நடப்பு சம்பா பருவத்தில் ஏ.டி.டீ. 49 ரக நெல்லைப் பயிரிட்டு அதிக சாகுபடி செய்து பயனடையலாம்.

விவசாயிகள், பருவத்துக்கேற்ப பயிர் செய்யும் முறை குறித்து ஆலோசனைகளும், வழிமுறைகளும் இருக்கின்றன.

இந்நிலையில், நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் ஏ.டி.டீ. 49 நெல் ரகத்தைப் பயிர் செய்தால், பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாகவும், அதிக சாகுபடியும் செய்யலாம் என (பயிர் மரபியல் துறை) உதவிப் பேராசிரியர் மணிமாறன் கூறியுள்ளார்.

சாகுபடிக்கு ஏற்றது ஏ.டி.டீ. 49: புதிய நெல் ரகமான ஏ.டி.டீ. 49, மத்திய சன்ன வெள்ளை அரிசி கொண்ட நடுத்தர வயதுடைய ரகம் ஆகும்.

இதன் பருவக்காலம் 130 முதல் 137 நாள்கள். ஒட்டாத, உதிரியான, சுவையான சாதம் கொண்டதாக இந்த ரகம் விளங்குகிறது.

இதுதவிர, குலைநோய், துங்ரோநோய், இலையுறைக் கருகல், இலையுறை அழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. மேலும், செம்புள்ளி நோய், இலை மடக்குப் புழுவுக்கு நடுத்தரத் தாங்கும் திறன் கொண்டது. சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 6 ஆயிரத்து 200 கிலோ நெல் மகசூல் தரவல்லது.

புதிய வீரியஒட்டு ரகம் நெல் கோ 4:
புதிய வீரியஒட்டு ரகமான நெல் கோ 4, மத்திய காலத்தில் 130 முதல் 135 நாள்கள் வரை ஆகும்.
மத்திய சன்ன அரிசி கொண்ட நெல் ஆகும். ஒட்டாத, உதிரியான, சுவையான சாதம் உடைய தன்மைகளைக் கொண்டது.

இந்த வீரிய ஒட்டுநெல், குலைநோய், பழுப்புப் புள்ளி நோய்க்கு எதிர்ப்புத் திறனும், பச்சைத்தத்துப் பூச்சி, வெண்முதுகுப் பூச்சி, இலையுறை அழுகல் நோய்க்கும் எதிர்ப்புத் திறனும் கொண்டது.
எனவே, நடப்பு சம்பாப் பருவத்தில் நெல் ரகம் ஏ.டி.டீ 49, வீரிய ஒட்டு நெல் கோ 4 சாகுபடி செய்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெற்று பயனடையலாம் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios