விளைச்சலை அதிகரிக்க உதவும் தொல்லுயிரி கரைசல்…

Crohns solution to increase yields
crohns solution-to-increase-yields


இயற்கை விவசாயத்தில் மட்டுமே அதிக மகசூல் கிடைக்கும் என்பதை பல விவசாயிகள் இன்றுவரை உணராமலேயே இருக்கின்றனர்.

தொல்லுயிரி கரைசல்?

க. 50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் ஒன்று எடுத்து கொண்டு, அதில் அன்று கிடைத்த பசுஞ்சாணம் 5 கிலோ, தூள் செய்யப்பட்ட வெல்லம் முக்கால கிலோ, கடுக்காய் 25 கிராம் எடுத்து அந்த பிளாஸ்டிக் கானில் போட்டு கலக்க வேண்டும்.

உ. அதிமதுரம் 2.5 கிராம் எடுத்து, அரை லிட்டர் நீரில் கொதிக்க வெய்து சேர்க்க வேண்டும்.

ங. பின்பு கேன் முழுவதும் நீர் நிரப்பி வைக்க வேண்டும்.

ச. இரண்டு நாள் கழித்து பார்த்தல், கேன் விரிந்து உப்பி இருக்கும். அப்போது, மூடியை லேசாக திறந்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உள்ளே இருந்து வரும் மீத்தேன் வாயுவால் கேன் வெடித்து விடும்.

ரு. பத்து நாட்கள் கழித்து தொல்லுயிரி கரைசல் தயார்  ஆகி விடும். இந்த கரைசலை வேறொரு கானில் மாற்ற வேண்டும்.

சா. ஒரு ஏகர் பாசன நீரோடு இந்த கரைசலை 200 லிட்டர் கலந்து விடலாம்.

எ. பத்து லிட்டர் நீரில் ஒரு லிட்டர் கரைசலை கலந்து தெளிப்பான் மூலன் தெளிக்கலாம்.

அ. இவ்வாறு பயிர் மேல் தெளித்தல், செடிகள் இலைகள் பெரிதாகி விளைச்சல் அதிகம் ஆகும். பூச்சிகளை விரட்டவும் செய்யும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios