புயல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒரு புறம் இருக்க …. நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச் செலவு போன்ற பல பிரச்சனைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள் பெரும்பாலான விவசாயிகள்.

அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில்

ஆடு, மாடு, பன்றி என இருந்தாலும் குறைந்த முதலீட்டில், குறைந்த காலத்திலேயே நிறைந்த வருமானம் கொடுப்பது, நாட்டுக்கோழிகள் தான்.

அதனால் தான் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில், நாட்டுக்கோழி மூலம் நல்ல லாபம் ஈட்டலாம்.

ரூபாய் 1000 முதலீடா போட்டால், ஒரு சேவல், ஒரு கோழினு வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிக்கலாம். கோழி வளர்ப்பு குறித்து எதுவுமே தெரியாதவர்கள் கூட மேய்ச்சல் முறையில விட்டு வளர்க்கலாம்.

அந்த இரண்டு கோழிகள் மூலம் ஒரு வருஷத்துல ஏகப்பட்ட கோழிகள் பெருகிடும். முட்டைகளையும் கோழிகளையும் விற்று நல்ல இலாபம் பார்க்கலாம்.

 “பண்ணையில கோழிகள் பெருகப் பெருக ரொம்ப சந்தோசமா இருந்தது. கோழிகள் பெருகினதால கோழிகள் வெளிய போகிடாம இருக்க, 3 ஏக்கர் நிலத்துக்கும் ‘டைமண்ட் கம்பிவேலி’ போடலாம்.

கோழிகளை வளர்க்க ஆரம்பித்தால் உள்ளூர்லயே நல்ல விற்பனை வாய்ப்பும் இருக்கும். சேவல், பெட்டைகளை மட்டும் விற்பனை செய்தாலே நல்ல இலாபம் பெறலாம்.

‘கோழிகளுக்கு தடுப்பூசி போடுவது மூலம் நோய்த் தாக்குதலில் இருந்து பாதுக்காக்கலாம்.

மேய்ச்சல் முறை வளர்ப்பு!

“கோழிகளை மேய்ச்சல் முறையில் வளர்க்கலாம். கோழிகளுக்குனு தனியா கொட்டகை அமைக்கத் தேவையில்லை. ஒரே ஒரு கூண்டும் சின்னக் கூரைத் தடுப்பும் மட்டும் போதும்.

குஞ்சுகளுக்கு அதிக வெப்பமும், அதிக குளிரும் ஆகாது. அதனால குஞ்சுகளுக்கு மட்டும் தனி புரூடர் ரூம் வெக்கலாம்.

வீட்டுலயே ஒரு ரூம்ல இன்குபேட்டரை வெச்சி அவ்வளவு கோழியும், மரம், கூரையில இருக்கிற குறுக்குக் குச்சிகள்ல அடைஞ்சுக்கும். அந்தக் கூரை தடுப்புலயே முட்டகளை வெச்சிடும்.

காலையில தானாவே மேய்ச்சலுக்கு அனுப்பி, மேயவிட்டு வளர்க்கிறது தான் அதோட இயல்பான வளர்ச்சியே இருக்கு. அதனால கரியும் சுவையா இருக்கும்.

தீவனத்துக்குச் செலவில்லை!

மேய்ச்சல் நிலத்துல அங்கங்க தட்டுக்கள் வெச்சு தண்ணி ஊத்தி வெக்கலாம். காலையிலும் சாயங்காலமும் மட்ட்ம் கொஞ்சமா கம்பு, மக்காச்சோளம் கொடுக்கனும். ஒரு கோழிக்கு 50 கிராம் அளவுலதான் கம்பும் மக்காச்சோளமும் செலாவாகும்.

காய்கறிக் கழிவுகள், கீரைகள், புல் எல்லாத்தையும் கோழிகளுக்குப் போடலாம். தோட்டத்துல கிடைக்கிற புழுக்கள், பூச்சிகள், கரையான்கள் எல்லாத்தையும் சாப்பிடும். அதனால தீவனத்துக்கு அதிக செலவில்லை. அதோட நல்ல முறையில் நோய் எதிர்ப்புசக்தியும் கோழிகளுக்குக் கிடைச்சிடும்.

தினமும் முட்டைகளைச் சேகரிச்சு பத்திரப்படுத்தனும். முட்டைகளை இன்கு பேட்டர்ல வெச்சா பொரிக்க 21 நாள் ஆகும். குஞ்சுகள் பொரிஞ்ச உடனே இன்குபேட்டரை சுத்தப்படுத்தி அடுத்த பேட்ச் முட்டைகளை வெக்கனும்.

புது முட்டைகளை வெச்சாதான் பொரிப்புத்தன்மை அதிகமா இருக்கும். அதனால அப்பப்போ, கொஞ்சம் முட்டைகளை விற்பனை செய்து, புது முட்டைகளா பார்த்து இன்குபேட்டர்ல வெக்குறதும் நல்லதே.

முட்டையிட்ட கோழிகள் அடைக்குப்படுக்கும். அந்த சமயத்துல அந்த கோழிகளை மட்டும் தனியா ஒரு கூண்டுக்குள்ள கட்டி வெச்சிடனும். அந்தக் கோழிகள் கிட்ட சேவல் போய் பழகும்போது கோழிகள் அடையை மறந்து உடனே இனச்சேர்க்கைக்கு தயாராகிடும். அதனால முட்டைகள் தொடர்ந்து கிடைச்சுகிட்டே இருக்கும்.

மருத்துவம் அவசியம்!

குஞ்சுகளுக்கு,, பிறந்த அன்னிக்கு கருப்பட்டி தண்ணி கொடுத்து புரூஸ்டர் ரூம்ல விடனும். அந்த ரூம்ல மின்சார பல்புகளைத் தொங்க விட்டு, குஞ்சுகளுக்கு வெப்பம் கிடைக்க ஏற்பாடு பண்ணலாம்.

பிறந்த 3, 4, 5- ம் நாட்கள்ல ஆண்டிபயாட்டிக் மருந்துகளை தண்ணீர்லகலந்த் கொடுக்கனும். 7 -ம் நாளும், 21 -ம் நாளும் வெள்ளைக் கழிச்சலுக்கான தடுப்பு மருந்து கொடுக்கனும். 35 -ம் நாளுக்கு மேல் அம்மைக்கான தடுப்பூசி போடனும். 55 -ம் நாள் குடற்புழு நீக்கம் செஞ்சிடனும். 65 -ம் நாள் திரும்பவும் வெள்ளைக் கழிச்சலுக்கான பூஸ்டர் கொடுக்கனும்.

மத்தபடி ஒவ்வொரு பருவம் மாறுறப்பவும் அந்த சமயத்துக்கான தடுப்பூசி போடனும். குஞ்சுகளுக்கு 15 நாள் வரை மட்டும் கம்பெனிகள்ல கிடைக்கும் குஞ்சுகளுக்கான அடர் தீவன’த்தை வாங்கி கொடுக்கலாம். அதுக்கப்பறம் மேய்ச்சலுக்கு விட்டு பழக்கனும்.

100 கோழி, 15 சேவல் மட்டும் வெச்சு பண்ணை நடத்தினாலே வருஷம் ரூ.5 இலட்சம் நிச்சய லாபம் எடுக்க முடியும். அதையும் தாண்டி கூட இலாபம் எடுக்க முடியும். முறைப்படி கோழிகளை வளர்த்தா கண்டிப்பா இலாபம் நிச்சயம்.