வழக்கமான தர்பூசணி;

நாம் வழக்கமாக சாப்பிடும் சாதராண தர்பூசனி குறைந்தது 8 கிலோவும், அதிகமாக 12 கிலோவும் இருக்கும். அதன் சாகுபடி காலம் 90 நாள்கள். அதில் இனிப்புச் சுவை கொஞ்சம் குறைவு. நவம்பர் மாதத்தில் விதைப்பு ஆரம்பித்து, ஜனவரியில் சந்தைக்கு வரும். பழங்கள் ஜூன், ஜூலை வரை இருக்கும்.

ஐஸ்பாக்ஸ் தர்பூசனி:

ஐஸ்பாக்ஸ் ரகங்கள் வருடம் முழுவதும் சாகுபடி செய்யப்படும். ஒரு பழத்தின் எடை ரகத்தைப் பொறுத்து 2 கிலோ முதல் 5 கிலோ வரை இருக்கும். அதிகமான இனிப்புச் சுவையுடன் இருக்கும். 

இந்தப்பழம் வழக்கம்போல் தமிழகத்தைவிட கேரளாவில்தான் அதிகம் விற்பனை ஆகும். இதன் சாகுபடி காலம் 60 நாள்கள். பெரிய தர்பூசனி ரகங்களைவிட இவற்றிற்கு கவனிப்பும் பராமரிப்பும் அதிகம் தேவை.

ஐஸ்பாக்ஸ் தர்பூசணி அதிகமானபோது துணிந்து சாகுபடி செய்தனர். வருடத்திற்கு 2 முறைதான் பயிர் செய்வது நல்லது. இதன் சாகுபடியில் விதையை நேரடியாக வயலில் விதைப்பதற்கு பதிலாக நர்சரிகளில் 15 - 17 நாட்கள் நாற்றாக வளர்த்து, பிறகு நடவு செய்தால் நல்ல பலன் உண்டு. சொட்டுநீர்ப்பாசனம் மூலமாக கூட ஐஸ்பாக்ஸ் சாகுபடி செய்யலாம்.

மகசூல் ஏக்கருக்கு சராசரியாக 20 முதல் 25 டன் வரை கிடைக்கும். விலை ரூ.20.