பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கும் இயற்கை விவசாயம்…

butterfly in-agriculture


தற்போது இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி கடந்த 40 ஆண்டுகளில் அதனுடைய எண்ணிக்கையில் அதிக அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பட்டாம்பூச்சிகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும். ஆனால் இந்த ஆண்டு 75% இந்த இடமாறுதல் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த இனமும் பெருமளவு குறைந்துள்ளது.

இதனை சரிசெய்ய Centre for Ecology மற்றும் Hydrology அமைப்பாளர்கள் பட்டாம்பூச்சியின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் என்ன என்பதை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். பட்டாம்பூச்சியினை பாதுகாக்க தற்போது இங்கிலாந்து அரசு தேசிய பூங்காவினை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இயற்கை விவசாய முறையினை மேற்கொண்டால் கண்டிப்பாக பட்டாம்பூச்சிகளின் இனத்தினை அபிவிருத்தி செய்யலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருந்தாலே பட்டாம்பூச்சி இனங்கள் அபிவிருத்தி அடையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios