அதிக வருமானம் பெற நாட்டுக் கோழி வளர்ப்புதான் எவ்வவும் பெஸ்ட்….

Best of poultry farming for the highest income ....
best of-poultry-farming-for-the-highest-income


கால்நடை வளர்ப்புதான் லாபகரமாக விவசாயம் செய்வதற்கு ஏற்றது. அவற்றிலும் குறைந்த தண்ணீர் வளம் மட்டுமே உள்ள விவசாயிகளுக்குக் கைகொடுப்பது, கோழி வளர்ப்பு.

தற்போது பிராய்லர் கோழிகளை உண்பதால் நேரும் கெடுதல்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், நாட்டுக் கோழிகளுக்கான மௌசு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சந்தை வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதால், விவசாயிகள் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.

கோழிக் குஞ்சுகள் பிறந்த 20 நாள்கள் வரை செயற்கையா வெப்பம் கொடுத்து பராமரிக்கணும். தகரத்தை வட்ட வடிவமா வெச்சு 100 வாட்ஸ் பல்புகளைக் கட்டித் தொங்கவிட்டால் போதுமானது.

100 குஞ்சுகளுக்கும் சேர்த்து 100 வாட்ஸ் பல்பு ஒன்றே போதும். குஞ்சுகள் எண்ணிக்கை அதிகமா இருந்தா பல்புகளை அதிகப்படுத்திக்கணும். ராத்திரி நேரத்துல, குளிர் காத்து குஞ்சுகளைத் தாக்காத அளவுக்குச் சுத்தி மறைப்பு இருக்கணும்.

தரைப்பகுதியில் நிலக்கடலைத் தோலைப் பரப்பிவிட்டால் மெத்தை மாதிரி இருக்கும். கோழிகள் அதிகமாகத் தண்ணீர் குடிக்கும். அதனால, கோழிகளுக்குச் சுத்தமான தண்ணீர் எப்பவும் இருக்கிற மாதிரி பாத்துக்கணும்.

குஞ்சுப்பருவத்துல பொட்டுக்கடலைத்தூள், மக்காச்சோள மாவைத் தீவனமாகக் கொடுக்கலாம். 15 நாள் குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 8 கிராம் வரை தீவனம் கொடுக்கணும். ஒரு மாசக் குஞ்சுகளுக்கு 15 கிராம் வரை தீவனமாகக் கொடுக்கணும்.

20 நாளுக்கு மேல் கொட்டகை

2 அடி உயரம், 30 அடி சுற்றளவுல வட்ட வடிவமா தகரத்தை வெச்சா, அதுல 300 குஞ்சுகள் வரை விடலாம். இப்படி 20 நாள் பராமரிச்சுட்டுப் பிறகு கொட்டகைக்கு மாத்திடணும். கொட்டகை, நல்லா காற்றோட்டமா இருக்கணும்.

20 அடி நீளம், 10 அடி அகலம்னு கொட்டகையை அமைக்கலாம். கொட்டகைக்கு நான்கு புறமும் 2 அடி உயரத்துக்குச் சுவர் வெச்சு, அதுக்கு மேல வலையால அடைத்துவிட்டால் போதும். தென்னை ஓலை வெச்சு கூரை அமைச்சா குளுகுளுனு இருக்கும்.

கொட்டகையோட தரைப்பகுதியில் 2 அங்குல உயரத்துக்கு நிலக்கடலைத் தோலைப் பரப்பிவிடணும். கோழிகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளும்போது காயம் படாம இருக்கிறதுக்காக அலகு நுனியை வெட்டிடணும்.

2 மாசத்துல இருந்து குஞ்சுகளை விற்பனை செய்ய ஆரம்பிக்கலாம். 100 நாள்களுக்குப் பிறகு விற்பனை செஞ்சா நல்ல விலை கிடைக்கும்.

வளர்ந்த கோழிகள்ல வருஷத்துக்குச் சராசரியா 40 சேவல்கள், 30 கோழிகள்னு விற்பனை செய்றேன். கோழிகளை கிலோ 700 ரூபாய்னும், சேவல்களைக் கிலோ 400 ரூபாய்னும் விற்பனை செய்யலாம். அந்த வகையில் 50,000 ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும்.

மொத்தமாகப் பார்த்தால், வருஷத்துக்கு எப்படியும் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும். எல்லா செலவும் போக 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios