வீட்டுத் தோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்…
- நமது நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும்.
- நமது வீட்டின் சூட்டை ஆறு முதல் எட்டு டிகிரி குறைப்பதால் இயற்கை ஏசியாக செயல்படுகிறது.
- கட்டிடத்தை வெயில் மற்றும் குளிர் இரண்டிலிருந்தும் தனிபடுத்தி காக்கின்றது.
- கெமிக்கல் இல்லாத சத்தான, புதிய உணவை தருகின்றது.
- நமது உடலுக்கு நல்ல பயிற்சியாக அமைந்து வலுவாக்கின்றது.
- சுத்தமான காற்றை தருகின்றது.
- சத்தத்தால் ஏற்படும் பாதிப்பையும் குறைத்து அழிந்து போகும் குருவிகள் இனத்திற்கு வீடு கொடுத்து நமக்கு புண்ணியமும் தருகின்றது.
- நமது தோட்டத்தில் செடிகள் வளர ஆரம்பித்தவுடன் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் செலவிட்டாலே போதும். அதுவும் அதிலேயே உடற்பயிற்சி, சுவாச பயிற்சி (சுத்தமான காற்றுடன்) எல்லாம் அடங்கி விடும்.