கோழிகளுக்கு வரையறுக்கப்பட்ட அளவு தீவனம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்...
கோழிகளின் வளரும் பருவத்தில் தீவனத்தை வரையறுக்கப்பட்ட அளவு கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
கோழிகளுக்குத் தேவைப்படும் தீவனச்செலவு குறைகிறது. ஏனெனில் கோழிகளுக்குத் தேவைப்படும் தீவனத்தில் 80 சதவிகிதம் மட்டுமே அளிக்கப்படுகிறது.
இவ்வாறு வரையறுக்கப்பட்ட தீவனமளிக்கப்பட்டு வளர்க்கப்படும் கோழிகள் ஒரு டஜன் முட்டைகளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் தீவனத்தின் அளவு குறைவாகிறது.
வளரும் பருவத்தில் குறைவான தீவனம் அளிக்கப்படுவதால் இக்கோழிகளின் உடலில் கொழுப்பு கட்டும் அளவு குறைந்து அதிக முட்டைகளை முட்டையிடும் பருவத்தில் உற்பத்தி செய்கின்றன.
தீவனத்தைக் குறைத்துக் கொடுக்கும் போது பலம் குறைந்த கோழிகளை அவற்றின் குறைவான வயதிலேயே கண்டுபிடிக்கலாம். இந்தக் கோழிகளை பண்ணையிலிருந்து நீக்கி விடுவதால், தீவனம் மிச்சமாவதுடன், முட்டைக் கோழிக் கொட்டகையில் உயிரோடிருக்கும் கோழிகளின் எண்ணிக்கையும் உயர்வதால், ஆரோக்கியமான கோழிகளை மட்டும் முட்டைக்கோழிக் கொட்டகைக்கு மாற்றிடலாம்.
தேவைக்கேற்றவாறு தீவனம் அளித்து வளர்க்கப்படும் கோழிகளை விட தீவனம் வரையறுக்கப்பட்ட அளவு அல்லது தேவையை விடக் குறைவாக கொடுக்கப்பட்ட கோழிகள் பெரிய முட்டைகளை இடும்.