தென் மாவட்டங்களில் தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக அதிகம் பயிரிடப்படுகின்றது பாக்கு மரம். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடிய மரம்.

பாக்கு ராகங்களில் ஜாவா தீவுகள் ரகம் அதிகமாக பயிரிடப்படுகின்றது. அறுபது நாள் முதல் எழுபது நாள் நாற்று நடலாம். அதாவது விதைகள் மணலில் புதைத்து அவை முளைத்த பின் பிடுங்கி பின்னர் நடலாம்.

பாகு ஈரப்பதம் அதிகமாக தேவைப்படும் பயிர். செம்மண் நிலங்களில் அதிகம் பயிரிடப்படுகின்றது. கர்நாடக மாநிலத்தில் அதிகமாக தனிப்பயிராக சாகுபடி செய்ய படுகிறது.

பாக்கு பெரும்பாலும் முதலில் வாழை கன்றுகள் நட்டு பின்னர் எட்டு அடி இடைவெளியில் அவற்றின் நிழலில் நட்டால் தான் நன்கு வளரும். நடவு செய்ய 2×2 அடி குழி தேவைப்படும். நிழல் பாங்கான பகுதியில் குழிக்குள் நடவேண்டும்.

அடி உரமாக மண்புழு உரம் மற்றும் நுன்னுயிர் உரங்கள் கலந்து இட்டு பின்னர் நடவு செய்யலாம். மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் தொடர்ந்து பாசன நீரில் கலந்து விட்டால் திரட்சியான மரங்கள் மற்றும் பெரிய பாளைகள் உருவாகும்.

பாக்கு நான்கு ஆண்டுகள் கழித்து பருவத்திற்கு வரும். நோய் தாக்குதலும் சற்று குறைவு தான் காற்றில் ஈரப்பதம் இருக்கும் பகுதியில் அதிக மகசூல் கிடைக்கும். வாரம் ஒரு முறை அறுவடை செய்யலாம்.