மாடு வாங்கப் போறீங்களா? இதெல்லாம் வெளிநாட்டு மாடுகள்... தெரிஞ்சுக்குங்க...
வெளிநாட்டு மாடுகள்
1.. ஜெர்சி
தோன்றிய இடம்:
ஆங்கிலக் கால்வாய் பகுதியில் ஃபிரான்ஸ் கடற்கரை அருகேயுள்ள ஜெர்சி தீவில் உருவான மாட்டினம்.
அறியப்பட்டதற்குக் காரணம்:
பாலில் உள்ள அதிகக் கொழுப்புத்தன்மைக்காகப் பெயர் பெற்றது.
தனித்தன்மைகள்
** மிகவும் பழமையான பால் மாட்டினமான இது வெளிநாட்டு பால் மாடுகளில் குட்டையானது. ஆறு நூற்றாண்டுகளுக்குக் கலப்பு இல்லாமல் வளர்ந்துவந்தது.
** மிகவும் லேசான சாம்பல் நிறம்-எலி நிறம் முதல் செம்பட்டை நிறம் அல்லது கறுப்பு நிறத்திலும்கூட இருக்கும்.
** காளைகளுக்கும் பசுக்களுக்கும் உடல் பகுதிகளைவிட இடுப்பு, தலை, தோள் பகுதிகள் மிகவும் அடர்த்தியான நிறத்தில் இருக்கும். 26-30 மாதங்களில் கன்று ஈனத் தொடங்கும்.
** 13-14 மாதங்களுக்கு இடையில் மறுபடியும் கருத்தரிக்கும். தூய ஜெர்சிகள் ஒரு நாளைக்கு 20 லிட்டர்வரை பால் தரும். கலப்பின ஜெர்சிகள் ஒரு நாளைக்கு 8-10 லிட்டர்வரை பால் தரும்.
** 5.3 சதவீதக் கொழுப்பு, 15 சதவீதச் சாச்சுரேடட் இயற்கை கொழுப்பை (SNF) தரக்கூடியது. இந்தியாவில் நாட்டு மாடுகளுடன் பெருமளவில் கலப்பினம் செய்யப்பட்டு, இந்த ஜெர்சி கலப்பின மாடுகளே தற்போது பரவலாக உள்ளன.
பிரச்சினை:
** இந்தியாவின் வெப்பமான, ஈரப்பதம் மிகுந்த தட்பவெப்பநிலை இதற்குப் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
2.. ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன்
தோன்றிய இடம்:
ஹாலந்தின் வடக்கில் உள்ள ஃபிரீஸ்லாந்தை சேர்ந்ததால் இந்தப் பெயர் பெற்றது.
அறியப்பட்டதற்குக் காரணம்:
அதிகப் பால் கொடுப்பதற்காக அறியப்பட்டது. உலகப் பால் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் மாட்டினம். அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கும் மாட்டினமும்கூட.
தனித்தன்மைகள்
** இந்த மாட்டினம் வெளிநாட்டு பால் மாடுகளிலேயே மிகவும் பெரியது. சில வளர்ந்த மாடுகள் 700 கிலோவரை எடையுடன் இருக்கும்.
வ் பொதுவாகக் கறுப்பு-வெள்ளை, சிவப்பு-வெள்ளை கலந்த நிறத்தில் காணப்படும். 15 மாதங்களில் பிறக்கச் செய்யலாம்.
** 24-27 மாதங்களில் முதல் கன்றை ஈனத் தொடங்கும். வெளிநாட்டு மாடுகளில் அதிகப் பால் கொடுக்கும் வகையாகக் கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும்.
** அதேநேரம் இதன் கலப்பினம் 10-15 லிட்டர் பாலை தினசரித் தரும். இந்த மாட்டினத்தின் பாலில் கொழுப்புச்சத்து 3.45 சதவீதமே இருக்கும்.
3.. பிரவுன் ஸ்விஸ்
தோன்றிய இடம்:
ஸ்விட்சர்லாந்தின் மலைப்பகுதியில் உருவான இந்த இனம், பால் உற்பத்திக்காகப் புகழ்பெற்றது.
தனித்தன்மைகள்
** ஹரியாணா மாநிலம் கர்னாலில் உள்ள தேசியப் பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்.டி.ஆர்.ஐ.) கரண் ஸ்விஸ் கலப்பினத்தை உருவாக்கும் முயற்சி
** 1963-ல் தொடங்கியது. சாஹிவால், சிவப்பு சிந்தி ஆகிய வடஇந்திய மாடுகளுடன் ஸ்விஸ் மாடு கலப்பு செய்யப்பட்டு, புதிய கலப்பினம் உருவாக்கும் முயற்சி நடைபெற்றது.
** வட இந்தியாவில் கரண் ஸ்விஸ் என்ற பெயரில் இந்தக் கலப்பின மாடுகள் காணப்படுகின்றன.