ஆடுகளுக்கான கொட்டகைகளில் இத்தனை வகைகள் இருக்கு? முக்கியமானவை இவைதான்...
ஆடுகளுக்கான கொட்டகைகள்
பெரிய அளவிலான ஆட்டுப்பண்ணையின் பல்வேறு கொட்டகை பிரிவுகள் உள்ளன. ஆடுகள் தங்குவதற்கு கீழ்க்கண்ட கொட்டகை பிரிவுகள் தேவைப்படும்.
அவை பெட்டை ஆடுகள் கொட்டகை, கிடா ஆடுகள் கொட்டகை, குட்டி ஈனும் கொட்டகை , குட்டிகளுக்கான கொட்டகை, உரோமம் வெட்டும் மற்றும் இருப்பு வைக்கும் அறை, பணியாள் அறை
1.. பெட்டை ஆடுகள் கொட்டகை
** இனவிருத்திக்கு தேவையான பெட்டை ஆடுகளை பராமரிக்க இந்த கொட்டகை பயன்படுத்தப்படும்
** 60 பெட்டை ஆடுகளுக்கு மிhமல் இருக்கும் இக்கொட்டகையின் நீளம் 15 மீட்டர், அகலம் 4 மீட்டர் மற்றும் 3 மீட்டர் உயரமாகவும் இருத்தல் வேண்டும்.
** கொட்டகையின் உயரம் மூன்று மீட்டர் உயரமாகவும் செங்கற்களாலான தரையமைப்பு இருத்தல் நல்லது.
** தரையானது குளிர் பிரதேசங்களில் மரத்தினாலும், அதிக மழை பெய்யும் இடங்களில் நல்ல உயரமான தரையமைப்பு வசதியும் இருத்தல் வேண்டும்.
2.. கிடா ஆடுகளுக்கான கொட்டகை
** இனவிருத்திக்கு உகந்த கிடா ஆடுகளை தனித்தனி அறைகள் கொண்ட கொட்டகையில் பராமரித்தல் நல்லது. பெரிய கொட்டகையமைப்பில், மரப்பலகைகளாலானதடுப்பு கொண்டு தனித்தனி அறைகள் அமைக்கலாம்.
3.. செம்மறியாடு மற்றும் வெள்ளாடு குட்டி ஈனும் கொட்டகை அறை
** சினையுற்ற செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளை தனித்தனியே இந்த கொட்டகையில் அடைக்கலாம். இதனை குட்டி ஈனும் அறையாக பயன்படுத்தலாம்.
** இந்த கொட்டகை 1.5 மீ நீளமும், 1.2 மீ அகலமும், 3.0 மீ உயரமும் கொண்டதாகவும், தீவனம் மற்றும் வைக்கோல் வைப்பதற்கென தீவனத் தொட்டியும், தண்ணீருக்கென ஒரு தொட்டியும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
** இந்த கொட்டகை ஈரமற்றதாக இருத்தல் வேண்டும். ஈரம் உறிஞ்சும் தன்மையையும் கொண்டிருத்தல் வேண்டும்.
** குளிர் காலத்தில், இவ்வறைகளில் மிதமான வெப்பமூட்டிகளை பொருத்தி, பிறந்த குட்டிகளை குளிரின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.