கால்நடை கழிச்சல் நீங்க மூலிகை வைத்தியம்…

animal scours-herbal-remedies-you-are


நீர்த்த, துர்நாற்றமுடைய கழிச்சல் காணப்படும். வால் மற்றும் பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கால்நடைகள் சோர்ந்து காணப்படும்.
கலவை 1
சின்ன சீரகம் - 15 கிராம்
கசகச - 10 கிராம்
வெந்தயம்- 15 கிராம்
மிளகு- 5 எண்ணிக்கை
மஞ்சள் - 5 கிராம்
பெருங்காயம் - 5 கிராம்

மேற்கண்ட பொருட்களை நன்கு கருகும் வரை வறுத்து இடித்துக் கொள்ள வேண்டும்.

கலவை 2
வெங்காயம் - 5 பல்
புளி - 100 கிராம்
பூண்டு - 5 பல்

மேற்கண்ட பொருட்களை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறை
இந்த இரு கலவைகளையும் 100 கிராம் கருப்பட்டி ( பனை வெல்லம்) சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக கல் உப்பினில் ( தேவைப்படும் உப்பு - 15 கிராம் ) தோய்த்தெடுத்து நாக்கின் மேல் பகுதியில் தேய்த்த வண்ணம் ஓரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios