காடுகள் அழிக்கப்பட்டால் நாடுகள் அழியும்…
மக்கள் தொகை பெருக்கத்தாலும் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரிலும் காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. நாடு முழுவதும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பிலான காடுகள் அழிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதனால் மனித சமூகம் பல ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளது.
ஒரு நாட்டின் சுற்றுச்சூழல் சமநிலையுடன் இருக்க வேண்டும் என்றால் அதன் மொத்த நிலப்பரப்பில் 33 சதவிகிதம் காடுகளாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் தற்போது காடுகளின் பரப்பளவு 20 சதவிகிதத்திற்கும் குறைவான அளவே உள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் தேயிலை தோட்டங்களுக்காக காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டன. தற்போதும் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், மக்கள் பயன்பாட்டிற்காகவும் ஆண்டுதோறும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
காடுகள் அழிக்கப்படுவதால் தட்பவெப்ப நிலையில் பல முரண்பாடுகள் நிகழ்வது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கூட அதன் வெளிப்பாடே என்றும் கூறப்படுகிறது.
வளிமண்டல வெப்பநிலை உயர்வுக்கு காடுகள் அழிக்கப்படுவது தான் முக்கிய காரணம் என புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
காடுகள் அழிக்கப்படுவது கட்டுப்படுத்தப்படாமல் தொடருமானால் பருவமழை பொய்த்தும், அதிக அளவு பெய்தும் விவசாயமும் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என கூறுகின்றனர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.