கால்நடைகளுக்கு செயற்கைக் கருத்தரித்தலால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்...

Advantages and disadvantages of artificial pregnancy for livestock ...
Advantages and disadvantages of artificial pregnancy for livestock ...


கால்நடைகளுக்கு செயற்கைக் கருத்தரித்தலின் நன்மைகள்

** மந்தையில் கலப்பிற்கென காளை மாடுகள் வளர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை எனவே காளை மாடுகள் பராமரிப்புச் செலவு குறையும்.

** இது காளையிலிருந்து நோய் பரவுவதைத்  தடுக்கும்.

** முன்பே விந்துக்களைச் சேகரித்துத் தரம் பிரித்து வைப்பதால் குறைந்த தரம் கொண்ட விந்துக்களை அகற்றிவிடலாம்.

** இளம் கன்றுகள் உருவாகுவது பற்றி முன்பே தெரிந்து கொள்ளலாம்.

** விந்து சேகரித்த காளை மாடு அழிந்து / இறந்து விட்டாலும் தேவையான அளவு விந்தணுவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

** விந்துவை கிராமம் / நகரம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்வது எளிது.

** இது கரு உருவாதலை உறுதி செய்கிறது. மேலும் எந்த ஒரு (பசு (அ) காளை) மாட்டிற்கும் கலப்பினால் ஏற்றுக் கொள்ளாவிடினும் மீண்டும் கலப்புச் செய்யலாம்.

** இது சரியான சினைத் தருணத்தைக் கணக்கிட்டுக் கொள்ள உதவுகிறது.

** கருவுருதலை அதிகப்படுத்துகிறது.

** பதிவேடுகளைப் பராமரிப்பது எளிது.

** பழைய, எடை அதிகமான, காயம் பட்ட காளைகளிலிருந்த கூட விந்தணுவை சேகரிக்கலாம்.

கால்நடைகளுக்கு செயற்கை கருத்தலால் ஏற்படும் தீமைகள்

** நன்கு திறமையான தெரிவு முறைகளும் உபகரணங்களும் தேவை.

** இது இயற்கை முறையைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

** இனப்பெருக்கம் பற்றி முற்றிலும் தெரிந்த திறமை வாய்ந்த நபர்கள் தேவை.

** சரியாக சுத்தம் செய்யப்படாத கருவிகளைப் பயன்படுத்தும் போது அதன் விந்துத் திறன் குறைய வாய்ப்புள்ளது.

** காளையை சரியாக பரிசோதிக்காமல், சோதனைக்குட்படுத்தாமல் விந்து சேகரித்தால் பல மரபியல் நோய்கள் பசுவிற்குப் பரவக்கூடும்.

** காளைகளில் நல்ல உற்பத்தித்திறன் மிக்க காளைகள் மட்டுமே தேவைப்படுகின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios