கோழிகளை அடைகாக்க உதவும் உபகரணங்கள் பற்றி ஒரு பார்வை...
அடைகாப்பான் உபகரணங்கள்
இவை இளங்குஞ்சுகளுக்கு முதல் சில வாரங்கள் கதகதப்பும் மற்றும் வெளிச்சமும் கொடுக்ககூடியவை. இதில் கதகதப்புக்கு என்று ஒரு உபகரணம், வெப்பம் மற்றும் வெளிச்சத்தை எதிரொலிப்பான்கள் மற்றும் உயரங்களை மாற்றி அமைக்க தேவையான வசதிகள் ஆகியவை உள்ளன. அடை காக்க உபயோகப்படுத்தப்படும் சில உபகரணங்கள்:
1. கரி அடுப்பு / மண்ணெய் அடுப்பு
இவ்வகையான அடுப்புகள் மின்சாரம் இல்லாத இடங்கள் அல்லது மின்சாரம் விலை அதிகமாக இருக்கும் இடங்களிலும், மின்சாரம் தட்டுபாடு உள்ள இடங்களிலும் பயன்படுத்தபடுகின்றன.
இவ்வகையான அடுப்புகளில் தட்டுகள் மற்றும் குழி போன்ற அமைப்புகள் உள்ளதால், அது வெப்பத்தை ரொம்ப நேரம் இருக்குமாறு செய்கிறது.
2. எரிவாயு அடைக்காப்பான்
இயற்கை எரிவாயு அல்லது திரவ பெட்ரோலிய வாயு அல்லது மீத்தேன் ஆகியவற்றின் மூலம் சூடாக்கும் கம்பி வெப்படுத்தபட்டு சுமார் 3 – 5 அடி குஞ்சுகளுக்கு மேலே அமைக்கப்படுகிறது.
இவ்வகை அடுப்புகளில் பிரதிபலிப்பான்கள் அமைக்கப்பட்டு வெப்பத்தை குஞ்சுகளை நோக்கி எதிரொலிக்கப்படுகிறது.
3. மின்சார அடைக்காப்பான்கள்
இந்த அமைப்பில் சீரான ஒரே அளவு வெப்பம் பெரிய அளவு இடத்திற்கு இருக்குமாறு அமைக்கப்படுகிறது. இதனால் குஞ்சுகள் அடைக்காப்பானில் ஒரே இடத்தில் அடைவது தடுக்கப்படுகிறது.
ஒரு மின்சார அடைக்காப்பானை கொண்டு 300 முதல் 400 இளங்குஞ்சுகளை வளர்த்தலாம்.
4. அகச்சிவப்பு விளக்குகள்
இது அதே எதிரொலிக்கும் தன்மை கொண்டுள்ளதால் தனியாக எதிரொலிப்பான்கள் தேவைப்படாது.
150 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் 250 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் தேவையான வெப்பத்தை அளிக்ககூடியது.
5. எதிரொலிப்பான்கள் அல்லது ஹொவர்கள்
இவ்வகை எதிரொலிப்பான்கள் ஹொவர்கள் என அழைக்கப்படுகிறது.
இவை வெப்பத்தையும் ஒளியையும் எதிரொலிக்ககூடியது.
i).தட்டையான ஹொவர்கள்
இவ்வகை தட்டையானது .இதில் சூடாகும் கம்பிகள், சூடேற்றும் அமைப்புகள் மற்றும் தலைமை விளக்கு ஆகியவை உள்ளன.சிலவற்றில் வெப்பத்தை அளவிட வெப்பமானிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இவை கூரையிலிருந்து தொங்கவிடமால், நான்கு மூலைகளில் அமைக்கப்பட்ட தூண்கள் மூலம் நிற்க வைக்கப்படுகிறது.
ii).குழி வடிவான ஹொவர்
இதில் குழிவடிவான அமைப்பில் சதாரண மின்சார விளக்கும், வெப்ப நிலைப்படுத்தியும் , சில இடங்ளில் வெப்பமானியும் அமைக்கப்பட்டிருக்கும்.
6. இளங்குஞ்சு தடுப்பு அல்லது அடைக்காப்பான் தடுப்பு
இவைகள் 1 – 1.5 அடி உயரம் மற்றும் வெவ்வேறு நீளம் கொண்ட மெல்லிய இரும்பு தகடுகள் , அட்டை தட்டிகள் மற்றும் மூங்கில் பாய்களாகும்.
இந்த தடுப்பு போன்ற அமைப்பால் கோழிக்குஞ்சுகள் புரூடரை விட்டு தள்ளி சென்று குளிரால் பாதிக்கபடாமல் தவிர்க்கப்படுகிறது. இதனால் கோழிக்குஞ்சுகள் சூடான பகுதிக்கு அருகே செல்ல பழக கற்றுகொள்கிறது.
அடைக்காப்பானின் தடுப்பின் விட்டம் 5 அடி மற்றும் உயரம் 1.5 மிகாமல் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
பருவகாலங்களை பொறுத்து அட்டை தட்டு, இரும்பு தகடு, கம்பி வலை மற்றும் பாய் ஆகியவைகளை தடுப்புகளாக பயன்படுத்தலாம்.
வெயிற்காலங்களில் அடைக்காக்கும் காலம் 5-6 நாட்களும் குளிர்காலங்களில் 2-3 வாரங்களும் இருக்கவேண்டும்.
7. மின்சார சூடாக்கிகள்
இதில் சூடாக்கும் கம்பிகள் மற்றும் விளக்கு ஆகியவை உள்ளன. சிலவற்றில் வெப்பமானி உள்ளன.
சூடாக்கும் கம்பிகள் மற்றும் சுருள் கம்பிகள் மேலே எதிரொலிப்பான்கள் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் தேவைக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிகொள்ளலாம்.