12 அடி நீள பாம்புடன் டிவி பார்க்கும் சிறுமி... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
12 அடி நீளமுள்ள மலைப்பாம்புடன் சிறுமி டிவி பார்க்கும் வீடியோ சமூக வலைவளத்தில் பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
12 அடி நீளமுள்ள மலைப்பாம்புடன் சிறுமி டிவி பார்க்கும் வீடியோ சமூக வலைவளத்தில் பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வினோதமான காரணத்திற்காக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு சிறுமி டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடன் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பும் உள்ளது.
இதையும் படிங்க: 200 ஆண்டுகள் பழமையான கிரிஸ்டல் புல்லாங்குழல்… வாசித்து வரலாறு படைத்தார் லிசோ!
இதுத்தொடர்பான வீடியோ காண்பவரை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 5 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் சிறுமி மிகுந்த கவனத்துடன் டிவியில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது அருகே மஞ்சல் நிற மலைப்பாம்பு ஒன்று சிறுமியை சுற்றி உள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை... எந்த நாட்டில் தெரியுமா?
சிறுமி அதன் மீது அமர்ந்திருக்கிறார். சிறுமிக்கு துளியும் பயமில்லை. இந்த வீடியோவை பகிர்ந்தவர், நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள், ஆனால் இந்த சிறுமி முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறாள் என்று தலைப்புடன் பகிர்ந்துள்ளார். இதற்கு பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.