Asianet News TamilAsianet News Tamil

ஹமாஸ் - இஸ்ரேல் போர் மூண்டதால் மீண்டும் அப்படியே பலித்த நாஸ்டர்டாமஸ் கணிப்பு!

ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினர் மீது இஸ்ரேல் போரை அறிவித்திருக்கும் நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான மற்றொரு நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு உண்மையாகி இருக்கிறது.

As Israel Declares War on Hamas, Another Nostradamus Prediction for 2023 Comes True sgb
Author
First Published Oct 8, 2023, 10:34 AM IST

ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ள நிலையில், பிரெஞ்சு தத்துவஞானி நோஸ்ட்ராடாமஸ் கூறிய மற்றொரு கணிப்பு உண்மையாகியுள்ளது. தத்துவஞானி நோஸ்ட்ராடாமஸ் 2023 இல் ஒரு "பெரும் போர்" நடக்கும் என்று கணித்திருக்கிறார். சனிக்கிழமை தொடங்கிய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் அவரது கணிப்பை நிஜமாக்கியுள்ளது.

450 ஆண்டுகளுக்கு முன்பு நோஸ்ட்ராடாமஸ் தனது நூலில், "ஏழு மாதங்கள் பெரும் போர் நடக்கும். தீய செயல்களில் ஈடுபட்டவர்கள் கொல்லப்படுவார்கள்" என்று எழுதியிருக்கிறார்.

இஸ்ரேலிய பிரதமர் வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் குழுவுடன் "போரில்" ஈடுபட்டிருப்பதாகக் கூறியதை அடுத்து நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு பலித்துள்ளது.

பாலஸ்தீன ஹமாஸ் குழுவின் தாக்குதலில் 300 பேர் சாவு! காசாவில் இஸ்ரேலின் பதிலடியில் 230 பேர் பலி!

As Israel Declares War on Hamas, Another Nostradamus Prediction for 2023 Comes True sgb

ஹமாஸ் என்ற போராளிக் குழு இஸ்ரேல் மீது சனிக்கிழமை ராக்கெட் தாக்குதலை நடத்தியது. அவர்கள் காசா பகுதியிலிருந்து தெற்கு இஸ்ரேலை நோக்கி சுமார் 5,000 ராக்கெட்டுகளை ஏவினார்கள். அதன்பிறகு, பல வான்வழித் தாக்குதல்களில் சுமார் 300 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.

நோஸ்ட்ராடாமஸ் யார்?

மைக்கேல் டி நோஸ்ட்ராடாமஸ் ஒரு பிரெஞ்சு ஜோதிடர், தத்துவவாதி, மருத்துவர் என பலவிதமான அடையாளங்கள் கொண்டவர். எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் அமைந்த அவரது 942 கவிதைகளின் தொகுப்பான 'லெஸ் ப்ரொபிடீஸ்' புத்தகத்திற்காக நாஸ்ட்ராடாமஸ் மிகவும் பிரபலமானவர்.

இதுவரை அவரது கணிப்புகள் சரியாகவே இருந்துள்ளன. ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி, அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் படுகொலை என பலவற்றை நோஸ்ட்ராடாமஸால் சரியாக கணிக்க முடிந்திருக்கிறது. நோஸ்ட்ராடாமஸ் ஒரு புதிய போப்  வருகையை முன்னறிவித்தார். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரப் பேரழிவையும் அவர் முன்பே கணித்திருக்கிறார்.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios