Asianet News TamilAsianet News Tamil

அசதியில் தூங்கிய செவிலியர்; பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை - அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அவலம்

தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கதவுகளை பூட்டிவிட்டு செவிலியர் அயர்ந்து தூங்கிய நிலையில், சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Infant dies tragically while nurse sleeps during night shift in Dharmapuri
Author
First Published Jul 1, 2023, 10:34 AM IST

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாரத்தில் பாளையம் புதூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளுக்கு அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகள், பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் கடந்த 28ம் தேதி ஊத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி ஆனந்தி பிரசவத்திற்காக பாளையம் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் அவருக்கு பெண் குழந்தை சுகபிரசவமாக பிறந்துள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார நிலையத்திலேயே இருந்துள்ளனர். 

ஊர் மக்கள் முன்னிலையில் கணவன், மனைவி மீது தாக்குதல்: மனமுடைந்த தம்பதி தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில் நேற்று குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் சுமார் இரவு 11.30 மணி அளவில் குழந்தைக்கு அதிக அளவில் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது மருத்துவமனையில் பணியில் ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைவு வாயில் மற்றும் செவிலியர்களின் அறை உள்ளிட்டவற்றை உள்பக்கமாக பூட்டிவிட்டு தனி அறையில் சென்று தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

குழந்தைக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டவுடன் செவிலியர்களை அழைக்க முற்பட்ட பொழுது அறைகள் பூட்டபட்டிருந்ததால் எவ்வளவு கதவை தட்டினாலும், கூப்பிட்டாலும் அவர்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை எனவும் மேலும் மருத்துவமனையின் வெளிக்கதவுகளும் பூட்டப்பட்டதால் மருத்துவமனையை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மருத்துவமனைக்குள்ளையே சிக்கித் தவித்துள்ளனர். தொடர்ந்து செவிலியர்களை அழைக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து  உறவினர்கள் இன்று காலை மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தொப்பூர் காவல்துறையினர் நேரில் வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை அடுத்து பெண் சிசுவின் சடலத்தை வாங்கிச் சென்றனர்.

செந்தில் பாலாஜியால் முதல்வர் ஸ்டாலினுக்கு 1 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது - அண்ணாமலை பரபரப்பு தகவல்

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆறு ஊராட்சிகள் மற்றும் 17 கிராமங்களுக்கான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் மருத்துவர்களும் இருப்பதில்லை, ஒரே ஒரு செவிலியர் மட்டும் இருக்கின்றார். அவரும் இரவில் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு தூங்குவதால் இது போன்ற செயல்கள் அவ்வபோது நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios