Asianet News TamilAsianet News Tamil

அதிக பணம் செலவழிக்கும் ராசிக்காரர்கள்...இனி இப்படி செய்யாதீங்க...!!

சிலர் தங்கள் வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல், கற்பனை செய்ய முடியாத வகையில் செலவழிக்கிறார்கள்.  ஜோதிடம் சில ராசிக்காரர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள் ஆனால் அவர்கள் தங்கள் லாபத்தை சேமிப்பதில்லை என்று கூறுகிறது.

zodiac signs that spend a lot of money
Author
First Published May 1, 2023, 10:49 AM IST

பணத்தை சேமிப்பது ஒரு கலை என்றால், அதைச் செலவழிப்பதும் ஒரு விதமான கலை தான். நீங்கள் நிறையப் பணத்தைச் சேமிப்பவராக இருந்தால், அதில் ஒரு பகுதியைச் செலவழித்து நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்தாத ஒன்றை வாங்குவதை கற்பனை செய்து பாருங்கள்? ஆனால், பணத்தை ஆடம்பரமாக செலவழிக்க விரும்பும் சிலருக்கு அப்படி இல்லை.  இவர்கள் தங்களின் ஆசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் இவர்கள் வரவு செலவுத் திட்டத்தை குறித்து பொருட்படுத்தவில்லை.

ஜோதிடத்தில், நீங்கள் வாழ்க்கையில் அதிகமாகச் செலவழிப்பீர்களா, அல்லது அதிகமாகச் சம்பாதிக்கிறீர்களா அல்லது இரண்டு குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறீர்களா என்று தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது. மேலும் ஒருவரின் ராசியில் உள்ள குண நலன்கள் மற்றும் அவர்களின் ஆளுமை, இயல்பு ஆகியவை அவர்களின் செலவு செய்யும் விதத்தை பொறுத்து அமைகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. எனவே இங்கு நாம்  பணத்தை அதிகமாக அலட்சியமாக செலவு செய்யும் ராசியினரைக் குறித்து காணலாம்.

மேஷம்:

மேஷம் ராசியினர் தனக்கு நெருக்கமானவர்கள் அல்லது தன்னிடம் கேட்டவர்களுக்கு உதவி செய்ய தயங்கமாட்டார்கள். இதனாலேயே இவர்களுக்கு அடிக்கடி பணத் தட்டுப்பாடு ஏற்படும்.

மிதுனம்:

இவர்கள் தன்னை சுற்றியுள்ளவர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க வேண்டும், தங்களுக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னிடமிருக்கும் சேமிப்பை விட அதிக பணத்தை செலவு செய்வார். மேலும் இவர்கள் செலவு செய்த பின் தங்களின் சுழ்நிலையை நினைத்து வேதனை அடைவர். எனவே இந்த ராசிக்காரர்களின் மனம் இரண்டு விதமாக சிந்திக்கும்.

விருச்சிகம்:

இவர்கள் தன்னை யாரேனும் அவமானப்படுத்தி விடுவார்களோ என்ற எண்ணத்தில் அளவுக்கு மீறி செலவு செய்வர். மேலும் தனக்கு மதிப்பு குறைந்து விடுமோ என்ற பயத்திலும் அதிக செலவு செய்வது உண்டு.

தனுசு:

இந்த ராசிக்காரர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் செலவு செய்வர். குறிப்பாக தனக்கு ஒரு பொருள் பிடித்துவிட்டால் எவ்வளவு செலவானாலும் அந்த பொருளை வாங்கிவிடுவர்.

இதையும் படிங்க: திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையில் கை வைத்தவர் கைது

 

ஒழுங்கான முறையில் பணத்தை செலவு செய்யும் ராசிகள்:

ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் தங்களிடம் உள்ள பணத்தை  ஒழுங்கான முறையில் செலவு செய்வார்கள். மேலும் இவர்கள் பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல் அதை வீணாக செலவு செய்யவும் மாட்டார்கள். எனவே இவர்களிடம் பணத்தட்டுப்பாடு இருக்காது.

Follow Us:
Download App:
  • android
  • ios